Posts

Showing posts from August, 2023

சதாசிவமானது

மதுரை யம்பதி மானுடம் தந்தது; காடுகள் கரைகள் கால்கள் கடந்தது  ஞானமும் அறிவும் நல்லோர் தந்தது நமசிவாயமே நாவில் நின்றது  சகலமும் கற்று சதாசிவமானது ;பிரும்மத்தை உணர்த்தி பிரும்மேந்திரரானது இறையை இசையால் வடித்து தந்தது; எங்கும் காண்பவர் காட்சியானது  மாயம் செய்தது மனதில் நின்றது; வாதில் வென்றது மௌனமானது  புதுகை மண்ணில் புதுமை செய்தது ; கருவூர் வந்தது கருனை கொண்டது  நெருவூர் சென்று நிலைத்து நின்றது ;காவிரி மண்ணில் காயம் மறைத்தது  காலகாலமாய் காத்து நிற்பது, கருணை மழையே சதாசிவமானது

கண்கள் காண வரம் வேண்டும்

 வேண்டுமய்யா வரம் வேண்டும்  உன்னைக் காண வர வேண்டும் மனதில் மகிழ்வுடன் வர வேண்டும்  மந்திராலயம் வர வரம் வேண்டும் காலங்கள் கடந்தும் ஆள்பவனே  காவிரி கரையின் மூலவனே துன்ப துயரங்கள் துடைப்பவனே துங்க பத்ராவில் வாழ்பவனே வேண்டுமய்யா வரம் வேண்டும் உன்னை காண வர வேண்டும்  வீணை கொண்ட வாணியவள்  விரும்பி அழைத்த சூரியனே காண வேண்டும் உன் விழியை கருணை செய்வாய் காவலனே வேண்டுமய்யா வரம் வேண்டும்  உன்னை காண வர வேண்டும்  கண்களில் கனவுகள் வரவேண்டும்  கருணை மழையே வரம் வேண்டும்  கால்களில் வலுவை தர வேண்டும்  காண உன்னிடம் வர வேண்டும்  வேண்டுமய்யா வரம் வேண்டும் உன்னை காண வர வேண்டும்