Posts

Showing posts from February, 2023

எங்கள் காளியவள்

எரியும் தீயாய் எங்கும் ஒளியாய் உலவும் தேவியவள் ; ஊரைக் கொல்லும் தீமையை எரிப்பாள் எங்கள் காளியவள், வேலும் சூலமும் வேம்பும் அனலும் கொண்டவள் தேவியவள் ; வேடிக்கை காட்டும் வீணரை வீழ்த்தும் வெற்றிக் காளியவள், நீலநிறத்தில் ஆடை கொண்டாள் நீலி தேவியவள்; சிங்க பல்கொண்டு சீறி எழுவாள் சினத்தில் காளியவள், எரித்த தீமையின் சாம்பலில்  எழுவாள் ஈசனின் தேவியவள்; தாகம் தணிந்தே தாயாய் கனிவாள்  எங்கள் காளியவள்

குரு ராகவேந்திர

மண்ணில் நின்ற கால்கள் இங்கே; விண்ணை யளந்து விடை பல தந்தது, மந்திராலய மைந்தனின் விழிகள் ; விடியலை அழைத்தது இருளும் அகன்றது, கைகள் நீரினை தாரை வார்த்தது; தம்மை தந்து நம்மை காத்தது, சந்தியில் வந்தனம் தலைவன் செய்தது; சாயும் மனதை தாங்கி நின்றது, குருவின் அருளால் குலமும் தழைத்தது; கும்பிட்ட கரங்களை கண்ணீர் நனைத்தது, நல்லவன் தந்த நாளும் இனித்தது; நன்றியை உள்ளம் உயிராய் கொண்டது, ராக வேந்திரா யென்னும் ராகம்; நெஞ்சில் நிலைத்தது நாவில் இனித்தது, நாளும் பாடும் நாமம் காத்தது; நல்லதை யெல்லாம் அள்ளித் தந்தது, ராகவேந்திரா;ராகவேந்திரா ராகவேந்திரா;ராகவேந்திரா

அன்னை லஷ்மி

அள்ளி தருபவள் அன்னை இவளே ;ஆறுதல் அவளே; அன்னை லட்சுமி, ஆனந்த மழையே ;அற்புத சுடரே ;அன்னை அவளே; மகாலஷ்மி! மண்ணின் நனைந்த மழைத்துளி வாசம்; பொன்னை விதைக்கும் கரங்களின் நேசம், புதிதாய் விளையும் பூமியின் உயிர்கள்; அன்னை அவள் தரும் ஆனந்த பயிர்கள், பஞ்சமும் பசியும் பறந்து மறைந்தது , பாரின் மேன்மை அன்னை தந்தது, செல்லும் வழிதனை சொல்லித்தந்தது;  செல்வம் பெருகி செழுமை கொண்டது, அன்னை முகமது அருளைத் தந்தது ; வெள்ளை யானையில் வலம் இங்கு வந்தது, கரங்கள் குவிந்து வரங்கள் தந்தது  காட்டும் மலரில் கவலை பறந்தது, ஆனந்த மழையே ;அற்புத சுடரே ; அன்னை அவளே; மகாலஷ்மி!

அன்னை லஷ்மி

என்ன காட்சியிது அள்ளும் அள்ளும்   வண்ண கோலமிது அன்னை கோலமிது, எட்டு கரங்களிது ஏந்தி ஏந்தி  நம்மை காக்க கொண்ட நேசமிது, பாயும் குதிரை பலம் யானை மீது வலம்  பாரை காக்கும் நலம் என்ன காட்சியிது  அன்னை தேவியின் இனிய தோற்றமிது  எம்மை காக்குமிது என்றும் காவலிது கனிவை காட்டும் முகம் அபயம் காட்டும் கரம்  உலகை ஆளும் குணம் எங்கள் தாயவள் உலகை காத்திட அள்ளித் தருபவள்  உயிரின் நாயகி லஷ்மி தேவியே

குரு ராகவேந்திர

துளசிமாலை அணிந்த குருவின் காட்சி காணக் கிடைத்ததே, தூய வாழ்வின் கதவு திறந்தே உன்னை அழைத்து வந்ததே, மனித வாழ்வின் மகத்துவத்தை மனத்தில் ஏற்றி வைத்ததே, மாயக் கண்ணன் சொன்ன கீதையை மனமுருகி தந்ததே, அனுமன் பீமன் மத்வர் காட்டிய பாதை கடந்து வந்ததே, மந்திரா லயத்தில் மண்ணில் மறைந்து மனிதர் நம்மை காத்ததே, என்றும் எங்கள் குருவின் நாமம் இதயம் நிறைந்து நின்றதே ராகவேந்திரா ராகவேந்திரா  நாமம் வெற்றி கொண்டதே,

அனுமன் தானம்மா

இந்த மண்ணில் பிறந்த மானுடம் காத்த வீரன் தெரியுமா? அவன் அன்பால் கரைந்து அரவணைத்த கரங்கள் எதுவம்மா? உனக்கு தெரியுமா? கார் மேகம் கண்டெடுத்த நிலத்தைப் போலவே, கார் வண்ணன்  அடிமை கொண்ட வீரன் அவனம்மா, அஞ்சனையின் அருமை செல்வன் அனுமன் தானம்மா! நிழலாகி கருணை செய்யும் தருவைப் போலவே, அவன் உளம் புகுந்து அமைதி தந்தவன் ராமன் தானம்மா! மாலவனின் அவதார ராமன் தானம்மா! மறைத்து வைத்த வைரமதை கடலை தாண்டியே ; கண்டு சொன்ன கடமை வீரன் அனுமன் தானம்மா! அரக்கர்களின் ஊர் எரித்த ஆற்றல் தானம்மா! பாய்ந்து விழும் அருவியைப் போல் பாதை காட்டியே;  பாசம் கொண்ட தலைவனவன் இராமன் தானம்மா!  அன்னை சீதை அண்ணல் அவன் ராமன் தானம்மா! அனுமன் தானம்மா! இராமன் அடிமை  தானம்மா! அனுதினமும் அரவணைப்பான் அனுமன் தானம்மா!

பரமேஸ்வரா எங்கள் சோமேஸ்வரா

விழியாலே வழியாகும் வெண்பளிங்கு ஒளியாகும்; கயல் ஆடும் கடலாகும் கண்ணிமைகள் கரையாகும் ; காணாத காட்சியிங்கு பரமேஸ்வரா' கண் விழியாலே எமை யாளும் சோமேஸ்வரா, பிறைநின்ற முகம் ஒன்று;குளிர் ஒளிகாட்டும் வழி நின்று ; கனல் காட்டும் கண்ணொன்றுபரமேஸ்வரா ; பகைவென்று எமை காக்கும் சோமேஸ்வரா, செவ்வானம் சிவந்திங்கு; சிரம் தாங்கும் சிவன் கோலம்; கலையாத ஓவியமாய் பரமேஸ்வரா; கண்கொண்டோம்  காவல் நீயே சோமேஸ்வரா,

குரு ராகவேந்திர

அன்பின் உருவாய் கண்டோம் ;ஆறுதல் கண்டதும் கொண்டோம், ரட்சிக்கும் கரங்கள் காட்டும் ;ராகவேந்திர குருவைக் கண்டோம், அச்சம் தீர்ந்தது கண்டோம்; அவனிடம் அடிமை கொண்டோம்,  அனுமன் பீமன் வழியின் தோன்றல்; மத்வரின் சீடரை மனதில் கொண்டோம், பாதம் பணிந்து நின்றோம்;துளசி தீர்த்தம் உண்டோம், நோயின்வலிகள் நொடியில் மறைய; காக்கும் குருவின் கருணை கண்டோம்

தடையை தடுப்பவன்

  தடையை தகர்க்கும் தந்த முகமது, தந்திடும் தந்திடும் சாந்தியை தந்திடும், கூர்வேல் குமரனை காத்த கரமது  காத்திடும் காத்திடும் நம்மையும் காத்திடும், நித்திரை கலைந்த சித்திரை நாளில்  கலைந்த கனவை நனவில் காட்டிடும்  கண்ணில் பெருகும் நீரும் இனித்திடும், எங்கள் நாயகன் அன்பு விநாயகன்  ஈசன் அம்மை தந்த தலைமகன்  காட்சியில் மறையும் கண்ட துன்பங்கள், மலர்ந்த மாலையை தாங்கும் தோள்கள்  மஞ்சள் குங்குமம் குளிர்ந்த சந்தனம்  நெஞ்சில் நிறைந்தடும் நிம்மதி பிறந்திடும்

ராமதூதனே

பஞ்சமுகம் காட்டும் ராம தூதனே  பாசத்தோடு கை காட்டும் வீரனே, அஞ்சாமல் யமனை வென்ற பாயும் சூரனே அருள்வாய் நீ அஞ்சனையின் அன்பு மைந்தனே, கலைந்தோடி போனதெம் கனவின் மேகமே  கனலாகி நொந்ததெம்  உயிரின் தேகமே இசை பாடி உனைய ழைக்கும் வாழ்வின் ராகமே இன்றெமெக்கு யாருமில்லை ராம தூதனே, குருவாகி உலகாளும்  ஞான அனுமனே  சிரம்தாழ்ந்து சரணடைந்தோம்  எங்கள் ராஜனே, எம் சிரம் தாழ்ந்து சரணடைந்தோம் குரு ராஜனே

பிரம்மன்

பாரில் படைத்தனை உயிரை, உயிரில் தந்தனை உருவை, உருவில் கொண்டனை உணர்வை, உணர்வில் நின்ற நல்லுறவை, நிலைத்திட காப்பாய் உலகை

அன்னை காளிகாம்பாள்

கையில் வாளொடு கண்ணில் தீயொடு கயவரின் தலைமிதிப்பாள் சூலம் கொண்ட கரத்தினை உயர்த்தி படைதனை வென்றிடுவாள், ஆயிரம் கரம் கொண்டு யானையின் பலங்கொண்டு அதிசயம் புரிந்திடுவாள் அன்புடன் ஏங்கும் பிள்ளைகள் துயரை அன்னை களைந்திடுவாள், களையும் துயரங்கள் காண்போம் விடுதலை காளி காத்திடுவாள்  காலமேகமாய் இடியாய் முழங்கி கருணை பொழிந்திடுவாள், காளி காத்திடுவாள் காளிகாம்பாள் காத்திடுவாள்

அபயம் நீயே ராமா ராமா

அம்மா அப்பா என்றே உதடு அன்புடன் உச்சரிக்கும்  அபயம் வேண்டில் அதுவே உடனே ராமா என்றழைக்கும், அன்னையின் அன்பாய் தந்தையின் கரமாய் காக்கும் நாமம் இதே     ராமா   ராமா ராமா  ராமா அபயம் என்றும் நீயே, அற்புத வேள்வியில் அன்னையின் கருணையில் கண்டது உனை உலகம்  காதல் சீதையில் கானகம் மீண்டதில் காத்தது உனது தர்மம்  ராமா ராமா ராமா ராமாஅபயம் என்றும் நீயே, அருமை தம்பிகள் ஆருயிர் தோழர் அணைக்கும் உன் கரமே அஞ்சனை மைந்தன் ஆஞ்சனேயன் பாடும் ராகவனே, ராமா ராமா  ராமா ராமாஅபயம் என்றும் நீயே

சிம்ம ரூபனே

தாமரை மலராய் தாயை தாங்கும்  தங்க கரங்களே சிம்ம ரூபனே, கண்களின் கனலில் காவல் தெரியும்  கரங்களின் அணைப்பில் கருணை புரியும், சிம்ம ரூபனே சீறும் சிங்கமே  எங்களைக் காப்பாய் இந்த தருணமே, காற்றில் நீளும் காலனின் கரங்களை பாய்ந்து பிடித்தே தடுப்பாய் நீயே  காப்பாய் எமையே,காலனை வென்றே, மனதில் நேர்மை உடலின் தூய்மை  உள்ளம் உணரும் உந்தன் வலிமை, எங்கும் எதிலும் உந்தன் தோற்றம்  எதனையும் வெல்லும் வலிமையின் நாமம், நம்பிய உயிரை காக்கும் நாமம்  நாராயணா எனும் நரசிம்ம நாமம், நாராயணா நாராயணா நானிலம்  காப்பாய் நாராயணா

ராமன் ராமன் ராமன் அழகு

ராமன் ராமன் ராமன் அழகு ரகுவம்ச தோன்றலே அழகு, ரட்சிக்கும் கரங்கள் அழகு ராமசந்திர மூர்த்தி அழகு நீலவண்ண மேனியன் அழகு  நெற்றியின் திருநாமமும் அழகு, வில்லும் அம்பும் தோளின் அழகு, தோளின் மாலை உண்மையில் அழகு தந்தை துயர் துடைத்தது அழகு தாயின் வாக்கு காத்தது அழகு தம்பிகள் மீதவன் பாசம் அழகு தாங்கி நிற்கும் ராமன் அழகு ஆருயிர் சீதையை மீட்டது அழகு அதிலே சொன்ன பாடம் அழகு அனுமன் கண்ட ராமன் அழகு அற்புதம் அற்புதம் ராமன் அழகு ராமன் ராமன் ராமன் அழகு ராமன் ராமன் ராமன் அழகு

குரு ராகவேந்திர

கரம் காட்டி கருணை செய்யும் ராகவேந்திரா, கண் திறந்து பாடி நின்றோம் ராகவேந்திரா, மண்ணை நீ மருந்தாக்கி மாயமே செய்தாய், மாயவன் அவன் கண்ணனைப் போல்  மகிமை கொண்டாய், மாடுமேய்க்கும் பாலகனின் நாவில் நின்றாய், மன்னனிடம் மந்திரியாய் உயர்வு தந்தாய், எண்ணி எண்ணி எத்தனையோ வழிகள் சொன்னாய், ஏழை எங்கள் இருளகற்றி ஒளியைத் தந்தாய்,

அழகன் அவன்

செந்தூர் முருகன் அழகன் அவன்  சேவற்கொடியோன் அழகன் அவன், கையில் வேலுடன் கந்தன் அவன்  காட்சி தந்தான் கந்தன் அவன், மலரின் கிரீட மன்னன் அவன்,  வள்ளியின் காதல் மணவாளன், கள்ளம் இல்லா செல்வன் அவன், கருணை வடிவம் கந்தன் அவன்,   அழகு மயிலின்தோகை அவன்  அற்புதம் செய்யும் கலைஞன் அவன், மண்ணைக் காக்க விண்ணில் பறந்து  விரைந்து வந்திடும் வீரன் அவன்

அன்னை நீலயதாட்சி

காதலாள் கையமர்த்தி மடிகொண்டாள் தாயைப்போல, கரம் நீட்டி உடல் தேய்ப்பாள் உளம் வெல்வாள் காதலியாக , அடம் காட்டும் விடம் உண்ட கண்டனையே அரவணைத்து, தான் கொண்ட மலர்மாலை வைரங்கள் சூடி பின்னே, கண்பொத்தி கண்திறந்து ஈசனுடன் இன்புற்றே காதல் கொள்வாள், நீலகண்டன் அமுதமென உட்கொண்ட ஸ்ரீ நீலதயாக்ஷி அவள்

ஈசனின் கால்கள் ஆடியதே

கண்கள் இங்கே காண்கிறதே  காட்சியிங்கே வாழ்கிறதே  ஆலகால விடத்தை உண்டவன்  அற்புத நடனம் காண்கிறதே, தேவரை காக்க விடத்தை உண்ட  நீலகண்டன் காட்சியிங்கே , காளைமிதிலே கால்கள் ஆட  காண்பவர் பாவம் போக்கியதே, பத்து கரங்கள் ஆடியதே  பாவம் தீர்க்க ஆடியதே இடபவாகனன் இரண்டு கொம்பிடை  ஈசனின் கால்கள் ஆடியதே, பித்தன் சித்தன் காட்சி தந்தான்  சித்தம் தெளிந்திட மருந்து தந்தான் சிவனே சிந்தையில் இறங்கி வந்து  நமசிவாய எனும் நன்மை தந்தான், ஓம் நமசிவாய, ஓம் நமசிவாய

மாமன் கோவிந்தன்

மேகக்கூட்டம் தலையைத் தொட்டு தவழ்ந்து விளையாட, பச்சை மரங்கள் வளர்ந்து உயர்ந்து அதனைத் தாலாட்ட, மலையின்மடியில் மன்னன் முகமது மலர்ந்து மகிழ்ந்தாட, மலையப்ப சாமியுன் தோற்றம் எம்மை மழையாய்  குளிரூட்டும், குன்றின் மேலே குமரன் மாமன் கோலம் கொண்டாட,  குறைலில்லாத கோவிந்தன் புகழை கூவி குரல் பாட, மங்கா ஒளியுடன் மாயவன் கோவிந்தன் ஆதவன் சுடராக, கூடும் கூட்டம் நாளும் பொழுதும் காணும் நிறைவாக,

சொக்கேசன்

வைகை நதியில் நீந்தி விளையாடி,  பிட்டைத் தின்று கரையை மறந்து , காவலன் கையால் பிரம்படி பட்டு,  சோதனை செய்தவன் சொக்கேசன், சாகசம் செய்த சொக்கேசன் எரிந்த சாம்பல் உடல் கொள்வான், எலும்பு மாலையும் அவன் கொள்வான், மாலையும் மலர்களும் சூடிடுவான், மந்திரப் புன்னகை புரிந்திடுவான், வாழும் தத்துவம் சொக்கேசன், வாழ வைப்பவன் சொக்கேசன், நாளும் கிழமையும் சொக்கேசன், நம்மைக் காப்பவன் சொக்கேசன், நமசிவாயன் அவன் சொக்கேசன், நன்மைகள் செய்பவன் சொக்கேசன்

குரு ராகவேந்திர

வாழ்க வாழ்க வாழ்க நீயே வாணிதாசரே, அனுமனின் ஆசியை அள்ளி வழங்கும்  குருராயரே, வாணிதாசரே எங்கள் குருராயரே, புதிய ராகம் பூபாளத்தை புவனகிரி தந்தது புண்ணியபூமி புதல்வனை ஏற்றுபுனிதம் கண்டது, காவிரிகரை வந்து கடமை சொல்லி ஞானம் தந்தது, தஞ்சை மண்ணில் தரனியை காக்க தலைவனானது, வாணிதாசரே எங்கள் குருராயரே, கால்கள் கடந்த கல்லும் மண்ணும் புனிதமானது கண்ணன் காட்டிய கீதைசொல்லி கண்கள் திறந்தது, உள்ளம் உருகி உண்மை உணர்ந்து உன்னை தொழுதது, உலகம் வாழ நீ உணர்த்திய பாடம் உண்மையானது, வாணிதாசரே எங்கள் குருராயரே

அழகன் முருகன்

அழகன் எம்முருகன் அவன் அள்ளித்தரும் கலைஞன் அவன் அன்பால் நமை தன்பால் உள்ளம்  கவர்ந்தான்  கண்ணில் நிறைந்தான் கந்தவேளே, இறைவன் தந்த இளையோன் அவன் இனியோன் இன்னல் தீர்ப்போன் என்றும் காப்போன்  எங்கள் குமரவேளே, மலைமேல் ஏறிநின்றான் மறைபோல் பொருள் தந்தான் மடியில் இடம் கொண்டான் மயிலோன் சேவற்கொடியோன்  நம் பழனிவேலே, மண்ணாய் பெய்யும் மழையாய் பயிராய் அதன் உயிராய் நிறைவாய் என்றும் நிலையாய்  நின்று காப்பான் முருகவேளே

குரு ராகவேந்திர

உருவம் உருவம் பல உருவம் ஐந்து முகங்காட்டும்   ஹரிவடிவம், ஆயுதங்கள் பலகாட்டும் அற்புத கலசம் உடன்காட்டும் ஆஞ்சநேயன் தன் வடிவம், அச்சம் தீமை விரட்டிடுமே அன்பாய் கருணை பொழிந்திடுமே  அஞ்சனை மைந்தன் அருள் வடிவம், மனித வடிவில் பிறந்ததுவே மந்திராலயத்தில் நிலைத்ததுவே, காவியுடைதனை கொண்டதுவே  கருணை மழையாய் பெய்ததுவே, குறைகள் இல்லா  வாழ்வதனை  குறைவின்றி நாளும் தந்ததுவே, குருவாய் உருவாய்  உயர்ந்ததுவே  ராகவேந் திரனாய் தந்ததுவே

விட்டலா விட்டலா

காதல் அன்பால் கருவானது போல் கல்லும் உளியால் சிலையானது, மண்ணும் மழையால் பயிரானது போல் கண்ணன் கண்ணால் அருளானது, நிலவின் களங்கம் நிலையானது போல் வாழ்வில் துயரம் கரையானது, துளசி துடைக்கும் மருந்தானது தூயவன் கண்ணன் மனதானது, விடியும் சூரியன் வழியானது விட்டலன் வாழ்வின் வழியானது

அன்னை அங்காளம்மன்

அன்னை தாயே அருள் வடிவே, அங்காளம்மா எம் தாயே, எரியும் சூரியன் கோபமுடன் பகையை வென்ற தாய் நீயே, எங்களை காக்க சூலமுடன் எழுந்து வந்த தாய் நீயே, நிலவின் ஒளியாய் குளிர்ந்து நீயும் என்றும் தாயே எமைக் காப்பாய், நிலத்தையாளும் நித்யபூரணி நின்று காத்திடும் அங்காளம்மா

யானை முகத்தானை பார்

அதிசயம் இங்கே பார் ஆணை முகத்தானை பார், சந்தணக் கோலத்தில் சாந்தியை அருளும் சாந்த விநாயகன் பார், வெள்ளிப் பனிமலை நாயகன் மைந்தனை நித்தம் நினைத்துப் பார், நெஞ்சம் குளிர்ந்து நிலவாய் ஒளிர நிம்மதி வந்திடும் பார், மயக்கும் மாலைகள் பார் அருளும் கரங்களைப் பார், தும்பிக்கையான் தரும் நம்பிக்கையால் இல்லம் இனித்திடும் பார்  உள்ளம் மலர்ந்திடும் பார் அதிசயம் இங்கே பார் யானை முகத்தானைப் பார்

வெற்றிலை கொடியோன்

வெண்ணெய் கவசம் பூண்டிருப்பான் வெற்றிலை கொடியோன் அனுமன் தான், வேண்டிய காரியம் முடித்திடுவான் இராம தூதன் அனுமன் தான், அனுமன்தான் எங்கள் அனுமன்தான்  இராமதூதன்அனுமன்தான்,  கண்ணால் கண்டதும் உணர்ந்திடுவான் கவலை எதுவென அறிந்திடுவான், காலநேரம் பாராமல் கடிதென துயரம் துடைத்திடுவான், இராமதூதன் அனுமன் தான், இலட்சிய வீரன் அனுமன் தான், பாசம் கொண்ட பக்தனவன்,சீதையின் செல்லப் பிள்ளையவன், பாரினில் ராம பக்தரையே பலமுடன் காக்கும் பலராமன், பீமனை வென்ற வீரன் தான், ராகவன் தந்த அனுமன்தான்

நீல வண்ணன் நினைவதிலே

பச்சை வண்ண நிறமதிலே பசியை தீர்க்கும் வயல்போலே, பார்த்தன் ஏந்தும் கரம் பார்த்தே பாதை சொன்னான் பரந்தாமன், உயர்ந்து நிற்கும் கரம் காட்டும் உலக வாழ்வின் வழி கூறும், உள்ளம் கொள்ளும் உயர்வினையே இதயம் தொட்டு விரல் காட்டும், கண்ணன் கீதை தத்துவமே காலம் வெல்லும் களமாகும், காவல் அவனே காத்திருப்போம் கண்ணன் கீதை கேட்டிருப்போம், விடியும் வானினின் ஒளிதனிலே  வளரும் பயிராய் வாழ்ந்திருப்போம், நிலவின் ஒளியாய் குளிர்ந்திருப்போம் நீலவண்ணன் நினைவுடனே

குரு ராகவேந்திர

பாடம் சொன்னவன் பார்த்து மகிழ அற்புதம் செய்தது யாரம்மா, பார்த்தசாரதியை தோளில் தாங்கும் ராகவேந்திர குருவம்மா  நம்மை காக்கும் குருவம்மா, முற்றும் துறந்த முனிவனின் முகத்தில் மந்திரப் புன்னகை ஏனம்மா, காரிருள்வண்ணன் கண்ணன் செய்யும் கள்ளம் அதுவே பாரம்மா, கையில் ஏட்டுடன் கனிந்த முகமது சொல்லும் பாடம் கூறம்மா, கீதை தந்தவன் சொன்னதை தவிர வேறுயிங்கு என்னம்மா, ராகம் சொல்லி பாடம்  பாடம் சொல்லும்  ராகவேந்திரர் பாரம்மா, ராதையின் காதலன் ரட்சிப்பான் நம்மை ராகவேந்திரரைப் பாடம்மா,  நீ ராகவேந்திரரைப் பாடம்மா

தைப் பூச நன்னாலிலே

தைப்பூச நன்னாளிலே முருகா  தனியாத என்னாசை உனைக்காணும் பொன்னாசை  தீர்த்தாயே இந்நாளிலிலே முருகா, வேலோடு உனைக்கானவே வெறும் காலில் உனைநாடி உயிர் தமிழாலே உனைப் போற்றி நின்றேனே மலைமீதிலே முருகா, பழநி மலைமீதிலே முருகா, வீரத்தின் உடல்கொண்டு வேல்கொண்டு நீ நின்று சூரனை வென்றெடுத்த சேவற்கொடியோனே உனைநாடி வந்தேனே இந்நாளிலே முருகா, தைப்பூசநன்னாலிலே, மலர்மாலை பொற்கோலம் கண்டோம் உன் அருட்கோலம் கை காட்டும் கருனை உள்ளம் கண்டோமே இந்நாளிலே முருகா  தைப்பூச நன்னாளிலே , முருகா தைப்பூச நன்னாலிலே

அன்னை மகாமாரி

வெள்ளிக் கவசத்தில் வீற்றிருந்தாளவள்  எங்கள்அன்னை மகாமாரி, வேலும் சூலமும் வீரமும் கொண்டாள் அன்னை மகாமாரி, நெற்றியில் நீறும் குங்குமம் நெஞ்சம் நிறைந்த ஆரங்கள் ஆயிரம்  அற்புதம் அற்புதம் அன்னையின் தோற்றம் கொண்டவள் காளி அன்னை மாரி, கண்களின் கருனையில் கஷ்டங்கள் தீர்ப்பவள் கண்களின் தீயால் கயவரை எரிப்பவள்  எல்லாம் தருபவள் எங்கள் தாயவள் அன்னை மாரி மகாமாரி மாரி மாரி தாயே மாரி மண்ணை காப்பவள் மகாமாரி

குரு ராகவேந்திர

மனதாலே நினைத்தாலே மனதிற்குள் விதையாகி தருவாகி  கனி தரும் எம் ராகவேந்திரா, எங்கள் கலிதீர்க்க காவலானாய்  ராகவேந்திரா, கமண்டலத்தின் நீர் தெளித்து கண்ணீரைத்தான் துடைத்து  கல்யாணக் கோலம் தந்தாய் ராகவேந்திரா, எங்கள் குலங்காத்து குருவானாய் ராகவேந்திரா, கைகாட்டி அபயம் தந்து கல்வி கேள்வி ஞானம் தந்து  சபைதனிலே பதவி தந்தாய் ராகவேந்திரா, எங்கள் அற்புதமே அருள்மழையே ராகவேந்திரா, ராகவேந்திரா குரு ராகவேந்திரா, ரட்சிக்கும் நாயகனே ராகவேந்திரா

ஈசனின் அற்புதம்

கிடைத்தது காட்சி நிறைந்தது நெஞ்சம் கையிலை நாயகனே, கிடைத்தது தத்துவம் இனித்தது வாழ்வு ஈசன் உன் அருளே, நெற்றியில் சூரியன் தலைமேல் வளர்பிறை புரிந்தது தத்துவமே, வெம்மையும் குளுமையும் வேண்டும் என்றும் புவியின் வாழ்வதிலே, அரியும் நாகமும் இடபமும் மயிலும் மூசிகம் காட்டிடும் ஈசனின் காட்சியிலே, பல்லுயிர் எல்லாம் பாரினில் வேண்டும்  என்றொரு பாடம் தந்ததுவே, அம்மை யப்பனும் அருமை செல்வமும் அன்பை சொல்லிடுமே, மலையின் தோற்றமும் கங்கை ஓட்டமும் பூமியை காத்திடுமே, ஈசனின் காட்சியும் இசைந்த கோலமும் வாழ்வின் தத்துவமே  எல்லாம் நிறைந்து வாழும் வாழ்வு  ஈசனின் அற்புதமே

காப்பாய் அன்னையே

 நித்தம் நித்தம் அன்னை உனைநாடியே, சத்தம் சத்தம் இன்றி கண்கள் மூடியே, சித்தம் சித்தம் தெளிய யான் வேண்டவே, நித்தம் நித்தம் நின்று காப்பாய் அன்னையே

எங்கள் செல்ல விநாயகன்

 பச்சை வண்ணம் கொண்ட வெற்றிலையும்  மஞ்சள் முகம் கொண்ட மலர் நிறமும்  என்றும் ஒளிதரும் நெய் விளக்கும்  உன்முன் பணிந்திடும் இருகரமும் , வேழமுகம் கண்டு விழிகசியும், வேண்டும் வரம்பெற்று மனம் நிறையும், விண்ணில் பிறந்ததிட்ட முழுநிலவும், மண்ணில் இறங்கி  உனைக் காட்டும், எங்களின் செல்ல நாயகனே நீ என்றும் அருளும் விநாயகனே, எங்கள் விநாயகனே  விக்ன விநாயகனே

எங்கள் ஈசன் கண்டது

எரியும் தீபம் இசைந்த மாலை  எங்கள் ஈசன் கண்டது, உடலின் சாம்பலும் ஒலிக்கும் உடுக்கையும் ஈசன் எமக்கு தந்தது, அரிய வடிவம் அருவமாகி அம்மை யவளுடன் நின்றது  ஆடும் கால்களும் விரிந்த சடையும்  வாழ்வின் அருமை சொன்னது, சூலம் கொண்ட கரங்கள் எமக்கு  அபயம் காட்டி சொன்னது  துயரமில்லை துன்பமில்லை  தூயவாழ்வை தந்தது, நமசிவாய நமசிவாய நாமம் எங்கும் சென்றது நமசிவாயன் நமக்கு தந்த  நாளும் வென்று நின்றது

வேங்கடேசன்

வேண்டியதை தந்திடுவான் வேங்கடேசன், வேண்டும் மட்டும் தந்திடுவான் வேங்கடேசன், வெள்ளி மின்னும் வானில் அவன் வேங்கடேசன்,  வெண்ணிலவாய் வலம் வருவான் வேங்கடேசன், கருமேகவண்ணம் கொண்டான் வேங்கடேசன், காதல் மகள் நெஞ்சில் கொண்டான் வேங்கடேசன், அன்னையவள் ஆசையிலே வேங்கடேசன், ஆழ்ந்திருப்பான் வீழ்ந்திருப்பான் வேங்கடேசன், சங்கு சக்ர தாரியவன் வேங்கடேசன், சார்ந்தோரை காத்திடுவான் வேங்கடேசன், வென்றிடுவான் நம்மனதை வேங்கடேசன்,  வேண்டும் வரம் தந்திடுவான் வேங்கடேசன்

அன்னை மகாலக்ஷ்மி

காணும் காட்சி கண்களின் வரமாய் அன்னையை காட்டி நிற்கும், கனவிலும் காணா காட்சியாய் வந்து உள்ளத்தில் உறைந்து நிற்கும், அன்னை லட்சுமியின் ஆனந்த வடிவம் ஆருயிர் வென்றுவிடும், அற்புத யானையின் ஆனந்த கீதம் அறிமுகம் தந்துவிடும், பொன்னும் மணியும் கொண்டவள் கோலம் புவியை வென்றுவிடும்,  தாமரை பீடமும் பாதமும் கரமும் தரணியை காத்து நிற்கும், மந்திர புன்னகை மலர்ந்த முகமதில் நிலவாய் குளிரந்து நிற்கும், மகாலட்சுமி அன்னையின் கோலம் மனதை வென்றுநிற்கும்

அன்னை அபிராமி

தீராது உனை நாடி வந்தோம், துன்பம்  தீராது உனை நாடி வந்தோம், தீர்ந்த வினையாலே தீராத இன்பங்கள்  உன்னாலே கொண்டோம், உன்னாலே கொண்டோம் தாயே, கண்ணாலே கண்டோம், அழகான புதுவாழ்வு தன்னை  அன்போடு அருளோடு கொண்டோம், அபிராமி உன்னாலே கொண்டோம், தாயே, எந்நாளும் கண்டோம், மலர்மாலை தோள் கொண்டு நின்றாய், மனம் வாடா நிலைதந்து மகிழ்விங்கு தந்தாய், தாயே,மறுவாழ்வு தந்தெம்மை வென்றாய், கண்முன்னே கரம் காட்டி நின்றாய்  காணும் கண் முன்னே கனிவோடு  கனவாகி வந்தாய் தாயே, கனவாகி நனவாகி காட்சிங்கு தந்தாய்,  அபிராமி நிலவாகி ஒளியாகி உயிராகி வந்தாய்

நமசிவாய மே

மலை யொத்த மாலைதனை மகிழ்வோடு தோள்கொண்டாய், அழகான வெள்ளியாடை அற்புதமாய் பொன்கிரிடம், நெற்றியதில் திருநீறு நெஞ்சையள்ளும் உன்பேறு இத்தனைக்கும் மேலாக நின்றொலிக்கும் சிவாயம் நமசிவாயமே  ஓம் நமசிவாய மே

ஈசன் அருளால் இனியில்லை

இன்னல் இல்லை இனியில்லை  ஈசன் அருளால் இனியில்லை  இடப வாகனம் மீதமர்ந்த  ஈசன் அருளால்  இனியில்லை, உள்ளம் தந்தான்  உடுக்கை கொண்டான் கள்ள மில்லா  கையிலை நாயகன்  இனி காலமெல்லாம் கவலை இல்லை இனிஇல்லை, மங்கையுடன் பிறை கங்கையுடன்  கந்தனுடன் பிள்ளை கணேசனுடன்  காட்சிதந்தான் கருணையுடன்  காவல் கொண்டான் இனி கவலையில்லை, இல்லை இல்லை துன்பமில்லை  ஈசன் அருளால் துன்பமில்லை

சாயி சாயி பாபா சாயி

மண்ணைக் காக்க மானுடன் வந்தான், மனங்களை இணைத்து மனிதம் வென்றான், கண்களின் கருனை கங்கை நனைக்க  காண்பவர் உள்ளம் ஈரத்தில்     இனிக்க  தந்தான் வலிமை தணல்போல் எரிக்க, தாயின் விழியாய் காவல் காத்திட.  வந்தான் சாயி  வானம்போல  வளங்கள் தந்தான் மேகம் போல, குருவே போற்றி குருவே போற்றி, கூடி, நின்றோம்,குருவே போற்றி

இளங்குமரன்

இன்னுயிராகி இமைபோல் காப்பான், எல்லாம் தருவான் எங்கும் இருப்பான், உள்ளம் கொள்வான் உறவாய் வாழ்வான், அழகன் முருகன் அற்புதம் செய்வான், நிலத்தை ஆளப் பிறந்த தலைமகன்  நெஞ்சில் நிறைந்து கொஞ்சும் குமரன், எங்கள் குமரன் இளங்குமரன்  ஈசன் திருமகன் இளங்குமரன்

எங்கள் கணபதி

சிந்தை முழுவதும் எந்தன் கணபதி, செந்தூர் வேலன் தமையன் கணபதி, தாயின் செல்லப் பிள்ளை கணபதி, தருவான் எதையும் தந்த கணபதி, எதிலும் என்றும் முதல்வன் கணபதி, எல்லாம் தருவான் செல்வ கணபதி, அன்னை லட்சுமியின் அன்பு கணபதி, அள்ளித் தருபவன் லட்சுமி கணபதி, வெற்றித் திருமகன் வீர கணபதி, வேலவன் அண்ணன் பாச கணபதி, வேண்டும் வேண்டும் எங்கும் கணபதி, வேண்டி நின்றோம் உன்னை கணபதி

ஆற்றல் அனுமன் தானா

நீலவண்ணக் கடலையளக்கும்  நீலவண்ண ராமா, நின் பாதம் பணிந்து நிற்கும் அன்பன்  எங்கள் அனுமன் தானா? எங்கள் அருமை அனுமன் தானா, அலைகடலைத் தாண்டியே அன்னையை காட்டிய  ஆற்றல் அனுமன் கொண்டான், அஞ்சனை மைந்தன் உன் ஆருயிராகி உவகை கொண்டு நின்றான் ராமா உலகை வென்று நின்றான், தாயை கொள்ளவே நீ பாதை பார்க்கையில்  பாதம் பணிந்து நின்றான்  கார்வண்ணனே நீ கடலை வெல்ல அவன் சேர்ந்து சேது கொண்டான், செல்லபிள்ளையாகி நின்றான்,   ராமா நின்னைநெஞ்சில் கொண்டான்,    ராம ராம  ராம ராம என்ற நாமம் தந்தான்,  ராமசீதா ராமசீதா என்றே வாழ்ந்து வந்தான்

பாலகன் யேசு

பாலகன் ஏசு அவள் கரங்களிலே, மாதா மேரி அவன் பார்வையிலே, உள்ளம் கொள்ளும் காட்சியிதே, உண்மை சொல்லும் சாட்சியிதே, கன்னி மேரியின் கனவினிலே  காலம் விதைத்த விதையிதுவே, விதையில் வளர்ந்து மரமாகி  ஏசு தந்த நிழலிதுவே, பாவச் சுமைகளை தான்கொண்டு  பாதை காட்டிய வள்ளல் அவன், சிலுவையில் சிரித்தே சிதைபட்டு  மன்னித்தருளும் மாண்பு அவன், மேய்ப்பன் அவனே எம் ஏசு, மேகத்தின் மழையே எம் ஏசு

நமசிவாயனே

  ஓம் நமசிவாயனே  நாளின் வாசனே  நல்ல மனது தந்தாய், நதியின் மூலமே  மலையின் வடிவமே  மண்ணில் உயிரை தந்தாய், மலரின் வடிவிலே  மகிழ்வை தந்த நீ  மாயன் ஈசனானாய், வாழ்வின் வடிவிலே  வடிவம் தந்த நீ  நிலைத்த லிங்கமானாய், சிந்தை முழுவதும்  நிறைந்த நினைவிலே  நீலகண்டன் நின்றாய்  நாங்கள் கொண்ட யெம் வாழ்வில் நின்று நீ நமசிவாயமானாய், நமசிவாயனே நமசிவாயனே  நாளும் உன்னை கொண்டோம்  நமசிவாயனே நமசிவாயனே  நாளும் வென்று நின்றோம்

நாராயணனே நாராயணனே

சினந்தாய் சிவந்தாய் சூரியனே, சிங்கமுகம் கொண்டாய் நாராயணனே, அற்புத நிலவாம் அன்னையினை  மடிதனில் கொண்ட மாமலையே, தீமையை வென்றாய் தீயாகி, குளிர்ந்தாய் அமர்ந்தாய்  அன்னையுடன், அன்பாய் என்றும் எமைக்காக்கும்  அற்புதமே நரசிம்மமே, மார்கழிப் பனியில் பாடிநின்றோம்  மயக்கம் தீர்ப்பாய் மாமலையே

அண்ணாமலை நீ போற்றி

 அண்ணாமலையே போற்றி அருள்வாய் சிவனே போற்றி, எங்கள் துன்பம் நீக்கி காப்பாய் சிவனே போற்றி, தீயாய் நின்றாய் போற்றி திகழ்ந்தாய் ஒளியாய் போற்றி, கோபுர வாசலில் போற்றி கொண்டோம் எல்லாம் போற்றி, மலைவலம் வந்தோம் போற்றி மலையாய் உயர்ந்தோம் போற்றி, மாணிக்கவாசகன் போற்றி திருவெம்பாவை போற்றி, தந்தான் கொண்டான் போற்றி தலைவா உன்னைப் போற்றி, நிறைந்தாய் எங்கும் போற்றி நின்றாய் மலையாய் போற்றி, அண்ணாமலையே போற்றி உண்ணாமுலையவள் போற்றி, அண்ணாமலையே போற்றி அர்த்த நாரிசுவரனே போற்றி, அடியாய் அமிழ்ந்தாய் போற்றி முடியாய் உயர்ந்தாய் போற்றி, எரியும் தீபமே போற்றி எங்கள்  வாழ்வே போற்றி, அருள்வாய் அப்பனே போற்றி அண்ணாமலையே போற்றி

சரணம் ஐயப்பா

இல்லாதவரும் கல்லாதவரும்,  இந்நாட்டவரும் எந்நாட்டவரும் , ஏங்கி நிற்பார் உனைக்காண, இருமுடி கொள்வார் உனைக்காண, சரணம் சரணம் ஐயப்பா  சாமி சரணம் ஐயப்பா, மனித வாழ்வாய் காத்திடவே  மண்ணில் பிறந்த மாமணியே, மாயனும் மாலனும்  மனம் கொண்டு  மண்ணில் விதைத்த பொன்விதையே, சரணம் சரணம் ஐயப்பா, சாமி சரணம் ஐயப்பா, பால் வடியும் முகம் கொண்டாய்  புலியின் பாலை நீ கொண்டாய், பல்லில் விடமது கொண்டவளை  புவியை காக்க நீ கொன்றாய், சரணம் சரணம் ஐயப்பா,  சாமி சரணம் ஐயப்பா, பம்பையில் நனைந்து எழந்து வந்தோம், பாடியும் ஆடியும் ஏறி வந்தோம், பதினெட்டு படிகளில் ஏறி வந்தோம்,  பந்தம் சொந்தம் மறந்து வந்தோம், கண்கள் நனைந்து உன்னைக் கண்டோம் உடலின் உயிராய் உன்னைக் கொண்டோம்,, சரணம் சரணம் ஐயப்பா, சாமி சரணம் ஐயப்பா

சங்கு சக்கர தாரி

தாரி சுபதாரி,  தாரி சங்கு சக்ரதாரி, நின்ற கோலம் நிலத்தை ஆளும் தாரி,  நீலமேக வண்ணம் கொண்ட தாரி,  சங்குசக்ரதாரி, வற்றாத செல்வம் நீ தாரி,  வான் மழைபோல நீ தருவாய் தாரி,  சங்கு சக்ரதாரி, ஏங்கிநின்றோம் உனைக் காண தாரி, ஏழுமலை யானே முகம் காட்டு தாரி , சங்கு சக்ரதாரி,

அன்னை லலிதாம்பிகை

எங்கள் தாயின் இனிய முகம்,இனிதாய் எதையும் தந்தருளும், அழகின் அற்புத அவள் கோலம்,அள்ளி தந்திடும் ஆறாகும், பனியாய் சிகரம் தனைமூடும் பளிங்கு வண்ணம் அவள் தோற்றம், உருகி ஆறாய் நமைக் காக்கும் உள்ளம் அவளின் பெருவெள்ளம், வானின் விண்மீன் தரையிறங்கி தாயின் நகையாய் தான் அமரும், தங்க நிலவு பிறை காட்டி தாயின் உதட்டில் தவமிருக்கும், காலை கதிரவன் செவ்வானம் தங்கத் தாயின் மேல் தவழும், கருனை மழையாய் தாய் விழிகள் கண்திறந்தே நமைக்காக்கும்

அன்னை மகாலக்ஷ்மி

 விடியும் காலை விளக்காக வெள்ளி கரத்தால் அருள் செய்வாள், கிழக்கு வானில் கண் திறந்து இரவு மறந்து விழித்திருந்தாள், எங்கள் மனதின் இருளகற்றி இறைவி என்றும் காத்திருப்பாள், ஒளியை தந்தவள் வழியாகி வாரி செல்வம் தந்திடுவாள், மலரின் மாலைகள் பல சூடி மங்கல நாயகி வீற்றிருப்பாள், மலர்ந்த முகத்தால் மகிழ்வூட்டி மகாலட்சுமி நமைக்காப்பாள்,

அன்னை சந்தோஷ் மாதா

வெள்ளி நிலவு கோலம் காட்டும்  வேலும் வாளும் பகையை ஓட்டும்,  கண்கள் பொழியும் கருனை மழையும்  கழுத்தின் மாலையும் கவலை போக்கும், கையில் கிண்ணம் கரத்தின் அபயம்  கண்ணின் இமையாய் நம்மை காக்கும், சாந்தம் அமைதி தந்து அருளும்  சந்தோஷி மாதா சங்கடம் தீர்க்கும்

சிவ சிவ சிவ சிவனே

 ஊழியில் ஆழி எழுந்திடவே பெரும் ஊனும் உயிரும் மறைந்திடவே பொங்கி எழுந்த பிரளயத்திலே  போயின போயின போயினவே எல்லாம் போயின போயின போயினவே போயின வெல்லாம் மீண்டிடவே  ஊனும் உயிரும் வாழ்ந்திடவே  புறப்பட்டு வந்தாள் தாய் அவளே பூமியை காத்திட கண் விழித்தே பொழுது சாயும் நேரத்திலே பொங்கிடும் கருணை  பெண் ணவளே  வேண்டி நின்றாள் சிவன் முன்னே  வேலவன் தந்தை அவன் முன்னே  நான்கு சாமமும் கண்விழித்தே  நாயகன் சிவன் அவன்  தன் முன்னே வேண்டி நின்றாள்  தாயவளே  விண்ணவன் மன்னவன் அருளிடவே புலியின் ஆடையில் பாம்புடனே  உடுக்கை ஒலித்திட சங்குடனே மண்டையோட்டின் மாலையுடன்  மன்னவன் சிவன் அவன் பிறை யுடனே  காட்சி தந்தான் கண்முன்னே  மீட்சி தந்தான் மண் ணிதற்கே சிவ சிவ சிவ சிவ  சிவ சிவனே சிவ சிவ சிவ சிவ  சிவ சிவனே மீட்சி தந்தான் சிவன் அவனே சிவ சிவ சிவ சிவ சிவன் அவனே ஓம் நமசிவாய ! ஓம் நமசிவாய!

அழகு முருகன் வேலவன்

அழகு முருகன் அன்பு முருகன் அருமை முருகன் வேலவன், கனவை தாங்கி கண்கள் திறந்து கவிதை போலே வாழ்பவன், பாலின் வெண்மை கயலோ கண்மை உள்ளம் தேனாய் இனிப்பவன், உதட்டின் ஓரம் உருக்கும் புன்னகை உயிர் கலந்து தருபவன், எங்கள் ஈசன் இனிய செல்வன் என்றும் காவல் கொள்பவன், கையில் வேலுடன் கண்கள் திறந்து காலமெல்லாம் காப்பவன், பாதம் பணிந்தோம் பாசம் கொண்டோம் பாலமுருகா உன்னிடம், பனியை விலக்கி ஒளியை தருவாய் பாலன் நீயே என்னிடம்

ஆதி முதல்வன் நமசிவாயனே

கண்ணில் தெரிபவன் காளைவாகனன்  காக்கும் கரங்களில் சூலம் கொண்டவன்  தாயின் உடலில் பாதி கொண்டவன்  தனது உடலில் பாதி தந்தவன்  யானைமுகனை தந்த நாயகன்  அழகு முருகனை அணைத்துக் கொ ண்டவன்  அருவமானவன் உருவமானவன்  ஆதிமுதல்வன் நமசிவாயனே

அன்னை மகாலக்ஷ்மி

வெள்ளையானை மீதமர்ந்து, வேண்டி நிற்போர் மனம் உணர்ந்து, அழகு தாமரை மலர் கொண்டு,அருள்வாள் தேவி கரம் தந்து, ஆடை அணிகலன் அலங்காரம்,அன்னை காட்டும் அருட்கோலம், கண்கள் காணும் தாய் உருவம், கால மகள் கொண்ட அருள் வடிவம், மண்ணில் பதியும் அவள் பாதம், மகாலட்சுமியின் அருட் பாதம், மங்கை அவளின் திருக்கோலம்,  மண்ணைக் காக்கும் அவள் கோலம்

எங்கள் பரந்தாமன்

கைகள் ஏந்தி காற்றில் பறக்கும் கருடனை வணங்கி நின்றோம், காண கிடைக்காத காட்சியை கண்டு கைகள் கூப்பி நின்றோம்,  கருடா உன்னை கண்டு நின்றோம், வெள்ளை மேகமாய் மெல்ல நகர்ந்திடும் கருடன் தோள் மேலே நீலமேகமாய்  விண்ணையாள்பவன் எங்கள் கண்ணனவன், சங்கு சக்கர கோலம் கொண்டான்  காக்கும் வானமவன், காவல்  புரியவே பறந்து வந்தான்  எங்கள் பரந்தாமன்,

கலையின் வாணி

வெள்ளையுள்ளம் தந்தாய் தாயே  வேண்டும் அறிவை தருவாய் நீயே  கையில் வீணை கொண்டவள் நீயே  கலையின் வாணி அருள்வாய் தாயே, காலைக் கதிரவன் காட்டும் ஒளியே  மாலை மதியின் மயக்கும் மொழியே  தேடும் கண்களில் காட்சியும் நீயே  தெளிந்த ஓடையின் ஓசை தாயே, கரத்தில் ஏடுகள் கொண்டாய் தாயே  கவிதை ஆயிரம் தந்தாய் நீயே, கல்வி கேள்வி ஞானம் தந்து  காக்கும் தாயே கலையின் வாணி  கால்கள் பணிந்தோம் கரங்கள் குவித்தோம்,  காப்பாய் நீயே கலையின் வாணி

வாணி வந்தாக வேண்டும்

நீயும் வந்தாக வேண்டும் நின்று எமைக் காக்க வேண்டும்  வானின் மழையாகி வானவில் காட்டி    வாணி வந்தாக வேண்டும்,                            கவிதை தந்தாக வேண்டும் கலைகள் கொண்டாட வேண்டும்     கண்கள் காண்கின்ற காட்சி வழிநின்று கனவை மொழியாக.      நாங்கள் தந்தாக வேண்டும்,   வாணி வந்தாக வேண்டும்,   ஆடும் காலாக வேண்டும் அரங்கம் உனதாக வேண்டும்  மனது கொண்டாடும் மகிழ்வை கொண்டாட மண்ணில் நின்றாட.                                  ஆடும் காலாக வேண்டும், வாணி நீயாக வேண்டும்,  வானை வென்றாக வேண்டும் வழியாய் நீயாக வேண்டும்  விண்ணை மண்ணோடு விரைந்து இணைத்திங்கு வாழும் வழிகாண  வாணி வழியாக வேண்டும்,            வாணி வந்தாக வேண்டும்  வளங்கள் தந்தாக வேண்டும்  வாணி வென்றாள வேண்டும்

அன்னை மகாசோடசியே

 அன்னை தாயே அற்புத வடிவே  காக்கும் துர்க்கையம்மா,  மங்களம் தருவாய் மகாசோடசி  மங்கள நாளினிலே, கண்ணியம் காப்பாய்  கயமையை களைவாய்  கையில்வேலுடனே, கரங்கள் ஆயிரம் காட்டி நின்றாய்  எங்கள் கானக குறமகளே, இல்லம் வருவாய்  உள்ளம் கொள்வாய்  வீரத்தின்திருமகளே, விதியினை வெல்லும்  மதிதனை அருள்வாய் மகாசோடசியே, தாயே மகாசோடசியே

அன்னை மகாலக்ஷ்மி

மடியேந்தி  வரும் உன்னை மடிமீது சேயாக்கி  மனம் குளிர தந்திடுவாள் மகாலட்சுமி, மண்ணின் தாயாக தனைக் கொண்டாள் மகாலட்சுமி, மலர்மீது தான் அமர்ந்து மலர் போன்ற  கரம் காட்டி மாளாது தந்திடுவாள் மகாலட்சுமி, செல்வம் சேர்த்துனக்கு தந்திடுவாள் மகாலட்சுமி, கண் காட்டும் கருனை உள்ளம்  கவிபாடும் உன் கோலம் காட்சி கொண்டாள் மகாலட்சுமி, காலமெல்லாம் காத்து நிற்பாள் மகாலட்சுமி

முக்தீஸ்வரன்

வானின் நிலவு குளிரினைக் கூட்டும், வண்ண வயல்கள் தலையை ஆட்டும், தென்னை வளைந்து வழியினைக் காட்டும், தேடும் கண்களில் உந்தன் நாட்டம், முன்னை வினைகள் அருளைக் கூட்டும், முக்தீஸ்வரன் உன்னைக் காட்டும், நாவுக்கரசனும் அவனின் பாட்டும், நமசிவாயனை என்றும் போற்றும்

குரு ராகவேந்திர

அன்பாய் அருளுடன் பார்க்கும் கண்கள் என்றும் உனதன்றோ, ஆயிரம் கவலைகள் அற்புத நொடியில் தீர்ப்பவன் நீயன்றோ, என்றும் நீயன்றோ எம் குருவும் நீயன்றோ ,ராகவேந்திர  ராகவேந்திர குருவும் நீயன்றோ, காவிரி தந்த நாயகன் கொண்டது மந்திராலயமன்றோ, துங்கபத்திர கரைதனில் நின்றது காவிரி மைந்தனன்றோ, உறவுகள் தந்தது பாலமமைத்தது துறவியின் கருணையன்றோ, உறங்கா விழிகொண்டு உண்மையை சொன்னது  உயர்ந்தவன் உள்ளமன்றோ, எல்லாம் துறந்து எல்லாம் தந்தது  எங்களின் தெய்வமன்றோ, என்றும் நிலைத்து எம்மைக் காப்பவன்   ஏழையின் மைந்தனன்றோ, கரங்கள் கூப்பி கண்ணில் நீர் கொண்டு நிற்கும் மனிதனன்றோ, ரட்சிப்பான் எமை ரட்சிப்பான்   ராகவேந்திர குருவுமன்றோ

கண்ணா நீ காலெடுத்து

கண்ணா நீ காலெடுத்து;  கைகளிலே குழலெடுத்து;  வண்ண மயில் சிறகசைத்து வா, வான் மழையாகி நீ இறங்கி வா,  வழியெல்லாம் பூ இறைத்தோம்;  வாசலிலே கோலமிட்டோம்;  வண்ண பொடி தூவி நின்றோம் வா,  வான் மழையாய் நீ இறங்கி வா,  கண்ணன் அங்கே பாட்டிசைக்க ; கார்மேகம்  கால் நடக்க;  மின்னலென முகம் காட்டி வா, வான் மழையாகி நீ இறங்கி வா

ஆசைகண்ணா ஆடி வா

ஆடி வா நீ ஆசை கண்ணா ஆடி வா கண்ணா, பாடி உந்தன் பாதம் தொடுவேன் நீ ஆடிவா கண்ணா, ஆயர்பாடி ஆடி மகிழ்ந்திட்ட ஆசை கண்ணா நீ அல்லும் பகலும்பாடி நின்றோம் ஆசை கண்ணா வா மயிலின் இறகால் சிகரம் கொண்டாய்  ஆசை கண்ணா நீ அழகில் மயங்கி அடிமை யானோம் ஆசை கண்ணா வா, குழலினை கொண்டாய் கூட்டத்தை கவர்ந்தாய்  கொஞ்சும் பாடல் நீ பாடல் கேட்க ஓடி வந்தோம்  ஆசை கண்ணா வா, ஆசை கண்ணா வா,எங்கள் ஆசை கண்ணா வா

நாராயணா என்னும் நாமம்

மண்ணையளக்க வந்திறங்கி, விண்ணையளந்த மன்னவன் நீ, கண்ணின் கருமை நிறமாகி, கனவில் வந்து நிலைத்தவன் நீ, பொன்னின் நிறமதில் உளம்கொண்டு, பொன்னாய் ஒளிரும் மேனியன் நீ, சங்கு சக்கர கரம் காட்டி, காக்கும் கருனை உள்ளம் நீ, ஆசையோடு அனைத்து நின்று, அருமை அழகை கொண்டவன் நீ, கண்ணை மறைக்கும் திருநாமம், கனிந்து அருளும் உன் நாமம், எங்கள்  நா தரும் ஒரு நாமம், என்றும் உனது திருநாமம், நாங்கள் பாடும் உன் நாமம், நாராயணா யெனும் அருள் நாமம்

அன்னை காந்திமதி

 தாயே நீ தா  தாயே நீ தா, தாயே உன் அருள் பார்வை தளராத உன் கருனை தடையேதும் இல்லாமல் தாயே நீ தா தாயே நீ தா, தனையாளும் மா சக்தி நிலம் காக்கும் உயிர் சக்தி நிழலாடும் தருவாக நீ நின்று தாயே நீ தா தாயே நீ தா, தாயே எம் காந்திமதி தந்தாயே பொருணை நதி தருவாயே கண் திறந்து தாயே  நீ தா தாயே நீ தா

வாராய் வரலட்சுமி

வாராய் நீ எங்கள் தாயே வரலஷ்மி,நீ வாராய் நீ எங்கள் தாயே வரலஷ்மி, வானத்தில் மழைவந்து வாசலைத்தெளிக்க, வாடைகாற்று தெளித்ததை துடைக்க, எங்கள் கரங்கள் கோலத்தை விதைக்க, பயிராய் உயிராய் வாராய் நீ வரலஷ்மி தாயே, வீட்டை துடைத்து தோரணம் கட்டி, மேடை யமைத்து மாவிலை கட்டி, கலசம் கொண்டு கண்கள் வரைந்து, தென்னங்காய் கொண்டு தலையென வாரி, பூவைச்சூடி திலகம் தந்திட வாராய் நீ தாயே நீ வரலஷ்மி தாயே, மஞ்சள் முகத்தில் குங்குமம் வைத்து, கழுத்தில்   மங்கல நாணும் பூட்டி, பட்டில்  ஆடை பாதத்தில் சலங்கை, கையில் வளையல் கங்கணம் கட்டி, கண் இமைக்காமல் காவல் புரிந்திட,  வாராய் நீ வரலஷ்மி தாயே, அன்னை அழகாய் பாதம் பதித்திட, ஆயிரம் வண்ணங்கள் கண்கள் பறித்திட, இனிய கீதங்கள் எங்கும் முழங்கிட, மங்கல ஓசையில் இல்லம் நிறைந்திட, உள்ளம் குளிர்ந்திட வந்தாய் தாயே வரலஷ்மி, தந்தாய் ஆயிரம் வரலஷ்மி

வீனர் கற்க பாடம்

எங்கே எங்கே சென்றாய் எங்கள் தாயே, ஏங்கும் ஏங்கும் கண்கள் தானே, மரங்களை சாய்த்து உந்தன் பாதை மறித்து நின்றோம் மனிதர் யாமே, மணலைத் தின்று உந்தன் தேகம் சிதைத்த பாவி யாமே, வேண்டி நிற்கும் இந்த கூட்டம்  வெறும் வேஷம் அம்மா தாயே, வேண்டாம் அம்மா உந்தன் பாசம் இந்த வீணர் கற்க பாடம்

அன்னை மாரியம்மா

அருளும் கரமே ஆற்றல் வடிவவே அன்னை மாரியம்மா, அன்னை உன் முகம் பார்த்து நின்றோம் என்றும் மாரியம்மா, உயிரின் வடிவவே உலகின் கொடையே எங்கள் மாரியம்மா, கருமேகம் போலே காட்சி கொண்டாய் நீதான் காளியம்மா, பச்சை வண்ண ஆடை கொண்டவள் தாயே மாரியம்மா, பாசம் வளர்த்து பண்பை தருவாள் பாவை மாரியம்மா, மஞ்சள் மாலை மணக்கும் சந்தணம் கொண்டாள் தேவியம்மா, மனதை தேற்றி மாண்புகள் தருவாள் தங்க காளியம்மா, அன்னை மாரியம்மா! அருள் புரிவாய் காளியம்மா! எங்கள் மாரியம்மா! என்றும் காப்பாய் காளியம்மா!

அன்னை நீலயதாட்சி

அழகு வடிவம் அன்னை உருவம்  அணைத்து காக்குமடா அன்பில் கரைந்து அருளை பொழியும்  காவல் தெய்வமடா, சிவனில் இணைந்து சிந்தை கலந்து நிலைத்த வடிவமடா  நினைக்கும் முன்னே நித்தம் அருளும் நீலயதாக்ஷியடா, கடலின் ஓரம் காற்றில் அலையில் வாழும் தெய்வமடா  நன்மை கோடி நாளும் அருள்வாள்  நாகை மண்ணிலடா, பொன்னும் நகையும் மலரும் சூடி  நிலவு கோலமடா  நீலகண்டனின் நினைவில் வாழ்ந்திடும் நீலதயாக்ஷியடா

கண்ணின் ஜாலம்

கண்களிலே ஓர் மகிமை  கவி காளிதாசனின் கவிதை, இராமன் கை கொண்ட வில்லை  உன் புருவத்தில் காணும் விந்தை, நெஞ்சை யள்ளும் திலகம்  நிலவாய் உலவும் பாலம்   நிலவின் எழுகின்ற கோலம்  நின் செந்தூர முகம் காட்டும் ஜாலம், மலரின் மணக்கும் மாலை  மந்திர புன்னகை வேளை சிந்தை நிறைந்த காட்சி  செந்தூர நிறமே சாட்சி

புன்னை மாரியம்மா

அலையலையாய் ஆயிரம் கரங்கொண்டு அணைப்பாய் தாயே  அன்னை மாரியம்மா எங்கள் புன்னை மாரியம்மா, புற்றில் இருந்தவள் புதிராய் எழுந்தாய் புன்னை மாரியம்மா  புதிதாய் மலர்ந்த பூப்போல் உள்ளம் நிறைந்தாள் மாரியம்மா, காண்பவர் மனதை கலக்கம் நீக்கி காக்கும் மாரியம்மா  கண்களின் கண்ணீர் துடைக்கும் கரங்கள் கொண்டவள் மாரியம்மா, சத்தியம் நேர்மை தருமம் காத்து சாதிக்கும் மாரியம்மா சதாசிவம் கண்ட சாதனை நாயகி நல்லூர் மாரியம்மா, புன்னை நல்லூர் மாரியம்மா  புதிதாய் தருபவள் மாரியம்மா

அன்னை மும்பாதேவி

காலங்களிலே கரைந்து நின்றவள், கடலின் ஓர காவல் தெய்வமவள், கொங்கனத்தின் தாயே எங்கள்  ஸ்ரீ மும்பாதேவி அவள், இருண்ட காட்டிடை ஒளிரும் ஒளியவள், சிங்கத்தின் சீற்றம் கொண்ட தாயவள், தீமையை துரத்தும் சூலமானவள், இடியாய் மின்னலாய் மழையாய் இறங்கி ஈரம் விதைப்பவள்,  பயிராய் வளர்ந்து உயிரைக் காப்பவள், பசியைத் தீர்த்தவள் பஞ்சம் தீர்த்தவள்  பாரைக் காக்கும் ஸ்ரீ மும்பாதேவி  எங்கள் தாயவள்

அன்னை லலிதாம்பிகை

ஆடியில் சரணம் அன்னையுன் மடியில் அருள்வாய் நீயே லலிதாம் பிகையே, நாளும் பாடும் நாவும் உன்னையே அருள்வாய் தாயே லலிதாம்பிகையே, காசிபன் தந்தவன் சூரியன் சாரதி, அருணனை காத்தவள் லலிதாம்பிகையே, கொண்டவள் கோபம் தீர்த்தான் ஈசன் சாந்தமானவள் தாயே நீயே லலிதாம்பிகையே, நாவில் வசீனி கன்னிகை யானவள் சகஸ்ரநாமம் தந்தாய் தாயே நீயே லலிதாம்பிகையே, கண்களில் சாந்தம் கைதனில் அபயம் அமர்ந்த கோலமதை தந்தாய் நீயே லலிதாம்பிகையே,  கருவறை கொண்டவள் காக்கும் தாயவள் திருமியச்சூர் தாய் லலிதாம்பிகையே

தாயே நீ மாரி

கண்கள் காண ஒளியைத் தந்தவள்  தாயே நீ மாரி, காலகாலமாய் கண்ணாய் காப்பவள்  தாயே நீ மாரி, அற்புதங்கள் ஆயிரம் செய்யும்   தாயே நீ மாரி, ஆடியில் உன்னை நாடி  வந்திடும்  சேயை பார் மாரி, ஆற்றின் கரைதனில் ஈரமில்லையே  தாயே கருமாரி, ஆடியிலே மனம் வாடி நின்றோம்  தாயே கருமாரி, காணவில்லையே காற்றின் வேகம்  தாயே அருள்மாரி  காட்டிடு கருணையை கரிய மேகமாய்  தாயே அருள் மாரி, சாரி சாரியாய் பாடி வருகிறோம்  தாயே கருமாரி, சமய புரத்தாளே காத்திடு எம்மை  தாயே நீ மாரி

அன்னை பனசங்கரி

 வானில் கண்டேன் உன் ஒளியை, வாழ்வு கொண்டேன் உன்மடியில், பதாமி யென்னும் இடங்கண்டேன், பனசங்கரி யம்மா உனைக் கொண்டேன், கண்போல் காக்கும் தாய் உன்னை, கானகம் நடுவில் நான் கண்டேன், இமயவன் அருளை தேடிநின்றேன் உன்தாள் பணிந்தே அருள் கொண்டேன், பாதை தேடிய எம் கால்கள்   பதாமி நகரில் நின்ற தம்மா, பார்வை பாதம் பணிந்ததம்மா, பனசங்கரி நீ எமைக் காப்பாயம்மா

கிருஷ்ணா வந்து தா

கிருஷ்ணா வந்து தா  கிருஷ்ணா வந்து தா    உன் கைநிறைய அள்ளி அள்ளி  கிருஷ்ணா வந்து தா, குழலின் ஓசையும்  கன்றின் நேசமும்  கண்கள் காணும் காட்சியாக  கிருஷ்ணா அள்ளித் தா, நீலவானையே வண்ணமாக்கியே  நிலவின் முகம்  கொண்ட கோலம்  நீயும் அள்ளித் தா, கண்ணில் காதலும் கழுத்தில் மாலையும் உள்ளம் கொள்ளும் புன்னகையும்  எமக்கு அள்ளித் தா, நித்ய கண்ணனே நினது மடியிலே நின்று ஆடும் அருமை வாழ்வை அள்ளி அள்ளி   தா

அன்னை வராகி

கருமேக ஆடையோடு கண் திறந்து மின்னலாகி  இடியாக இறங்கி வந்தாள் அன்னை வராகி, புயல் மழையாகி மண்ணைக் காத்தாள் அன்னை வராகி, வந்தாள் வராகி  நிலம் கொண்டாள் வராகி, தந்தாள் வராகி  உயிர் வென்றாள் வராகி, புதையுண்ட பூமி தன்னை புதையாமல் காத்தளித்த  பெருமாளின் அவதாரம் அன்னை வராகி, எட்டு அவதார கன்னியவள் அன்னை வராகி, நின்றாள் வராகி  எட்டு கையுடன் வராகி, கையில் வராகி  கலப்பை கொண்டாள் வராகி, உருவத்தில் வராகம் உள்ளத்தின் புதுராகம் குலங்காக்கும் கன்னியவள் எங்கள் வராகி, குடும்பத்தை காத்துநிற்பாள் அன்னை வராகி,  அன்னை வராகி நம்மை ஆளும் வராகி, கண்ணில் உயிராகி நம்மை காக்கும் வராகி

காரிருள் வண்ணன்

தங்கமாலை மணி ஆரம்; தவழும் புன்னகை உதட்டோரம், நெடிய மாலன் அருளாலே;  நினைத்த தெல்லாம் கைகூடும், உன்னையே மனமே நாடும்;  உன்புகழ் என்றும் பாடும், கண்களைப் போலக் காக்கும்; காரிருள் வண்ணன் போதும்

மகாலஷ்மி

நிலவாகி உலவும் தாயம்மா,மகா  லஷ்மி நீ இருளை நீக்கி   ஒளியை தருபவள், வெள்ளி மேகம் மீது நடப்பவள், குளிர்ந்தே காற்றில் கலந்து வீசியே  கொண்டதையெல்லாம் அள்ளி தந்த நீ, அற்புத ஆடை ஆனந்த மாலை தாயின் கழுத்தில் தங்க அணிகலன், நெற்றியின் திலகம் நெஞ்சம் நிறைக்க கண்கள் திறந்து காத்திட வரும் நீ, உடலின் தூய்மையை உள்ளத்தில் நிறுத்தி,  உற்ற பொருளுடன் உறவினர் கூடி, வெள்ளிக் கிழமை காலை வேளையில் கண்கள் மூடி உன்னை   வணங்கிட, நீ

ஸ்ரீ தத்தாச்சிரியனே

அறிவு கண்ணை  திறந்து வைத்தவன்,  ஆச்சாரிய ரூபமானவன்,  படைத்து, காத்து ,முடிவில் நிற்பவன், சூலம் அஸ்தரம்  சக்கரம் கொண்டு காவல் செய்பவன்  காட்சி தருபவன்  ஸ்ரீ தத்தாச்சிரியனே

வேங்கடநாதனே

மனதினில் குழப்பமில்லை மகிழ்ச்சிக்கு குறைவும் இல்லை  பார்வை உன் மேனி பற்றி  பணிந்திடும் கரங்கள் கூப்பி  திருமலைச் செல்வமே, உள்ளமே , உருகு கின்றேன்  வேரெவர் எம்மைக் கொள்வார்  வேங்கடம் வாழ் பெருமாளே

அன்னை சிவகாமி

அண்டம் முழுவதும் ஆட்சி செய்வாள் அவள் அன்னை சிவகாமி, ஆயிரம் கரங்கொண்டு அருளைப் பொழிவாள் அன்னை சிவகாமி, பச்சை வர்ணமாய்பாடும் கிளியொடு பார்க்கும்காளியவள், பார்க்கும் கண்களில் பாசத்தை காட்டும் பார்வதி தேவியவள், எத்தனை முகங்கள் ஏந்திழை கோலங்கள் காக்கும் தெய்வமவள், அசுரரை வெல்ல ஆயிரம் முகங்கொண்ட அற்புத தோற்றமவள் அன்னை தேவியவள் அற்புத தாயுமவள், விண்ணை மண்ணை வென்று நிலைக்கும் எங்கள் தாயுமவள், காக்கும் தாயுமவள் கருணை தெய்வமவள் இன்றும் என்றும் சேயைக் காக்கும்  சிவகாமி யன்னைவள்

எங்கள் அனுமன் இங்கே

கையில் கதையுடன்  கருணை விழியுடன்  காக்கும் கரங்கள் இங்கே, கடலை தாண்டியே  தாயையை காட்டியே  துயரைத் தீர்த்த தங்கே, கழுத்தில் மாலையும்  தலையில் கிரீடமும்  தாங்கி நின்றதிங்கே,  காதல் நாயகன்  காலை வணங்கியே  ஏவல் செய்ததங்கே, பறந்து வெல்பவன்  பத்ம கோலத்தில்  காட்சி கொண்டதிங்கே தெய்வ குழந்தையாய்  ராமன் மடியிலே  தவழ்ந்த வீரனங்கே, எங்கள் அனுமன் எங்கே என்றும் அனுமன் இங்கே

அண்ணாமலை யானே

 ஒளியை தந்தவன் விழியில் நின்றவன்  உலகின் விடியல் யாரு, கண்கள் திறந்தவன்  தீயை உமிழ்ந்தவன்  உயிரின் தத்துவம் பாரு,  இறைவன் அவனைப் பாரு,  ஈசன் என்பது பேரு, இறைவன் அவனைப் பாரு  ஈசன் என்பது பேரு, அடியாய் முடியாய்   வளர்ந்து நின்று  ஆணவம் தணித்தவன் யாரு அண்ணாமலை போய் பாரு  உண்ணாமுலையுடன் பாரு, சடையும் முடியும்  நீரும் நெருப்பும்  தோலும் சாம்பலும் சொல்லும் செய்தி யாது  சுந்தர வதனமும்  சூடும் முடியும்  முடிவில் சாம்பல் பாரு, ஆடும் நடனம் பாரு  அவன் அற்புத கோலம் பாரு ஓடும் துன்பம் பாரு நீ உண்மை உணர்ந்து பாரு

அன்னை காளி

அலைபாயும் மனதோடு அச்சத்தின் பிடியோடு   உனைத்தேடி வந்தோமம்மா,  தாயே     வழியொன்று சொல்வாயம்மா, நினைவெல்லாம் தடுமாற்றம் தினந்தோறும்  ஒருமாற்றம்  மனம்சோர்ந்து போனதம்மா தாயே    மருந்தொன்று தருவாயம்மா, விழிகாணும் உன்தீபம்  வழிகாட்டும் சுடர் தீபம் இருள் நீக்கி தந்ததம்மா சூலம்    துணைவந்து காத்ததம்மா, கொடுங்கோபம் முகம் காட்டும்  கொலைவாளும் கரம் காட்டும்  பகைகூட்டம் வீழ்ந்ததம்மா காளி      வரம் வந்து காத்தாயம்மா

நீல நீல வண்ணன்

 நீல நீல நிறத்தில் நிலவொன்று  நெஞ்சத்தை கொள்ளை கொள்கிறது, நீல வண்ணனின் நீள்விழிப் பார்வை  நெஞ்சம் முழுவதும் இனிக்கிறது, கொஞ்சும் முகத்தில் குழந்தை கண்ணனின் குளிர்ந்த மனது புரிகிறது, குழந்தை வடிவமதில் கொள்ளையழகுடன் எம்மை என்றும் நிறைக்கிறது

கணபதி காணும் மழைதானே

 நெற்றியின் சந்தணம் நிறைந்த செல்வம் மலரின் மாலை மல்லிகை யோடு யானை முகத்தோன் ஆனந்த வடிவம் அருளை அருளும் மழைதானே

வேலவன் குமரன்

வேலோடும் மயிலோடும் விளையாடும் திருக்கோலம் உனையன்றி யார் சொல்லடா ?   முருகா உனையன்றி யார் சொல்லடா? கவி பாடும் உன்னழகை காணாது உளம்  வாடும் கண்திறந்து பார்ப்பாயடா; குமரா     காணும்  வழி சொல்வாயடா ! மனங் கவரும் மலர் மாலை  மயில் காட்டும் தன் தோகை மனதார கண்டோமடா முருகா மகிழ்தோடி வந்தோமடா! எமையாளும் இளங்குமரன் எழிலான அருள் கோலம் குறைவின்றி கண்டோமடா முருகா! நிறைவோடு நின்றோமடா!

அன்னை மாரியம்மன்

 மாரி மகமாயி மலர் மாலைகள் கொண்டவளே, மழையாய் நீ வந்திறங்கு எம் வாழ்வை காப்பவளே,  மாரி கருமாரி அருள் மாரி தாயவளே, மாரி மழைமாரி தந்தருள் தாயவளே, காயும் நிலங்காயும் கனலானது மண்மகளே, நோகும் உளம்நோகும் நொந்திடும் உம் குலமே, தாகம் எம்தாகம் தீர்த்திடு தாயவளே, தாயே தீர்ப்பாயே தணித்திடு தாகமதை, மாலை பூமாலை சூடிடும் மாரியம்மா, மேகம் கருமேகம் காட்டிடு காளியம்மா, வேண்டும் மழைவேண்டும் தந்திடு மாரியம்மா வேண்டும் கரம் வேண்டும் காத்திடு காளியம்மா

பூக்கள் சொல்வது புரிகிறது

 புரிகிறதா உனக்கு; பூக்கள் சொல்வது புரிகிறதா? மெல்ல உயரும் மொட்டுக்கள்  தாயின் மடியை நிறைக்கிறதே  தாளாமல் அதுவும் சிரிக்கிறதே, புரிகிறதா உனக்கு பூக்கள் சொல்வது புரிகிறதா?

அன்னை வாங்கலம்மா

வெள்ளை குதிரையின் மேலே ஏறி  வீரத்தாய் அவள் வருகின்றாள், மேகக்கூட்டம் போலே பறந்து  மேலே இருந்து பார்க்கின்றாள், வருகின்றாள் தாய் வருகின்றாள் வாங்கலம்மா வருகின்றாள், வருகின்றாள் தாய் வருகின்றாள்  வாங்கலை காக்க வருகின்றாள், இருண்ட முகம் தனில் சிவந்த விழிகொண்டு வருகின்றாள், இடியின் ஓசையாய் திரளும் மேகமாய் எம்மை காக்க வருகின்றாள், கால்களை உயர்த்தி பாயும் குதிரையில் பறந்து அவளும் வருகின்றாள்,  ஒளிரும் மின்னலில் இறங்கும் மழையாய் எம்நிலம் காக்க வருகின்றாள், வேலை ஏந்தி வெற்றியை பறிக்க வீரத்தாய் அவள் வருகின்றாள், புயலாய் மழையாய் பூமியை நனைக்க புறப்பட்டு   அவளும் வருகின்றாள், எங்கள் தாய் அவள் வருகின்றாள், எல்லா வளமும் தருகின்றாள், வாங்கலம்மா வருகின்றாள் வளமும் நலமும் தருகின்றாள்.

அன்னை காமாட்சி

 மனதில் பதியும் மஞ்சள் முகம் ஒன்று, கையில் கரும்புடன் காக்கும் கரம் கொண்டு,  கழுத்தின் மாலை  கவரும் கிரிடம்  அழகு தாமரை  அமர்ந்த பீடம்,  தாங்கி நிற்கும்  தாயின் கோலம்  கனிந்த கண்களில்  காட்சி அருளும் காமாட்சி அன்னை கருணைத் தோற்றம் காத்து நிற்கும் கருணைத் தோற்றம்

அன்னை லஷ்மி

 உண்மை செல்வம் வேண்டும் எனக்கு  உன்னை வணங்கும் தாயே எனக்கு, மனதில் மகிழ்ச்சி நாளும் வளர்ச்சி  தந்திட வேணும் தாயே லட்சுமி, சேரும் செல்வம் நிலைத்திடவேணும் உறவுகள் என்றும் உடன்வரவேண்டும், உலகம் முழுவதும் வலம் வரவண்டும்  ஊரார் அனைவரும் உடன் வரவேண்டும், கண்களின் ஒளிதனில் கருணை வேண்டும் காண்பவர் யாவரும் நலம் பெறவேண்டும், காப்பாய் தாயே  கருணைக் கடலே  காப்பவன் துணையே கரியவன் இணையே

தாயுமானவன்

 அன்பு கரங்களில் அருமை குழந்தைகள் அம்மையப்பனின் அருமை குழந்தைகள் தாயின்மடிதனில் தந்த நாயகன் தகப்பன் கரங்களில் பாலன் வேலவன் கண்கள் கொண்டது காட்சியானது காட்சியானது கருத்தை சொன்னது உலக வாழ்வின் உண்மையானது உயிர்கள் வாழவே வழியுமானது தாயின் வடிவிலே தன்னை தந்தது தன்னை தந்ததால் தாயுமானது தாயின் வடிவமே வாழ்வை சொன்னது தந்தை உருவமே முடிவை சொன்னது மழழை செல்வங்கள் மகிழ்ச்சி தந்தது மண்ணின் மகத்துவம் சொல்லி நின்றது நமசிவாயமே நாங்கள் கண்டது நமசிவாயமே நாளும் காப்பது

அன்னை உள்ளமே

 அன்னை உள்ளமே அன்பின் வெள்ளமே  கண்கள் காட்டிடும்  காவல் தெய்வமே,  கரங்கள் தேடிடும்  உந்தன் பாதமே, வெள்ளை மலரே விளக்கின் மஞ்சளே விடியும் சூரியன் தந்த வெள்ளமே விளைந்த நெல்லாய் வளைந்து வணங்குவோம், மண்ணில் முளைத்திட்ட மலையின் வடிவமே மழையை தந்திட்ட கருனை மேகமே ஓடி வளர்ந்தே உன் காலடி நனைப்போம், ஆயிரம் ஆயிரம்  கண்டோம் அன்னையே ஆயினும் போதும் அம்மா நீயே

நாங்கள் நாடும் நாராயணா

 கண்கள் மூடி உள்ளம் மலர்ந்து  உலகை காப்பவன் நீ, கழுத்தில் மாலை கரத்தில் காவல்  காட்டி நிற்பவன் நீ, நாங்கள் வணங்கும் தெய்வம் என்றும் நாராயணா நீ, நாளும் நாடும் தெய்வம் நீயே நாராயணா நீ, ஆமையாகி அமுதம் தந்து தேவர் மனதை வென்றாய், கள்வனாகி வெண்ணை தின்று எங்கள் மனதில் நின்றாய், சிங்க ரூபத்தில் நகத்தின் கூர்மையில் குடலின் மாலை கொண்டாய், கண்ணனாகி குழலின் இனிமையில் காதல் மாலை வென்றாய், நாராயணா நாராயணா என்றே நாங்கள் பாடி நின்றோம், நாளும் மறந்து உன்னை புகழ்ந்து நாங்கள் பாடி நின்றோம் நாராயணா நாராயணா நாராயணா நாராயணா

குரு ராகவேந்திர

 புல்லாங் குழலால் மயக்கும் ஒருவன்;  புன்னகை அம்பால் வீழ்த்தும் ஒருவன்; சிங்க முகந்தினில் சீறும் ஒருவன்; சேர்ந்தே அருளும் ஞானத் தலைவன்! குரு ராகவேந்திர என்னும் ஒருவன்! கண்ணின் கீதையை கவிதையாய் தந்தான்; மூல ராமனை நெஞ்சில் வைத்தான்; சிங்கமுகனின் பக்தனின் இருப்பிடம்' சேர்ந்தே அமர்ந்தான்; மந்தி ராலய மண்ணில் வாழ்ந்தான் துங்கபத்திரை ஆற்றின் கரையில்; துன்பம் தீர்க்கவே தன்னைத் தந்தான்! அருள்வாய் குருவே! அன்பின் வடிவே! யாரிங்கு உள்ளார்? எமக்கே இங்கே? குருவே சரணம்! குருவே சரணம்! கூடும் உறவுடன் உன்னிடம் சரணம் !

அன்னை தாயின் முகம்

எரியும் தீபம் காட்டும் முகம்  எங்கள் இதயம் கொண்ட முகம், செல்வம் தந்திடும் சிவந்த முகம்  செல்லமாய் காக்கும் தேவிமுகம், தாமரை பாதங்கள் கொண்ட முகம்  தாமரை யாய் மலர்ந்து நின்ற முகம், மலராய் மாலையாய் மலர்ந்த முகம், மனதில் நிறைந்து வாழும் முகம் , எல்லாம் எங்கள் தாயின் முகம்  என்றும் போற்றும் எங்கள் முகம்

அன்னை ஆதிபகவதி

ஆதி பகவதி ஆலயம் கொண்டாள்; அருளைத் தந்திடவே, அன்னை காளியாய் ஆயுதம் கொண்டாள் அகிலம் காத்திடவே, விண்ணில் பிறந்த ஒளி மண்ணில் மண்ணில் ஒளிர்ந்தது மனிதம் காத்திடவே மாயமேகங்கள் மழையாய் கரைந்தது தாயவள் முழக்கத்திலே,மண்ணது வளத்தினிலே, சிவந்த ஆடையும் சீறும் பார்வையும் காஈட்டிடும் கண்களிலே, சிவந்த வானமாய் இருளை விரட்டிடும் தேவியின் நல்லருளே, எல்லாம் கொடுத்திடும் அவள் கரமே  எங்கள் கொடுங்கலூர் பகவதி அவள் கரமே

யானைமுக கணபதியே

என்னென்ன பேறு பெற்றோம், எல்லாமே நாங்கள் பெற்றோம்,  எந்நாளும் பொன்னாளாக்கி  தந்தாய் நீ கணபதியே, தந்தங்கள் தாங்கி நீயே!  தந்தாய் எம் கணபதியே! அறிவு தந்து; ஆற்றல் தந்து;  அனைவருக்கும் அன்பைத் தந்து;  ஆதரிக்கும் தெய்வம் நீயே!  யானை முக கணபதியே! அன்னையிடம் பாசம் கொண்டாய்;  தந்தையிடம் ஞானம் கொண்டாய்;  தம்பியை தாங்கி நிற்கும்;  தமையனாகி நின்றாய் அன்பாய், எல்லாமே சொல்லித் தந்து;  எம்முடனே சேர்ந்து நின்று;  எந்நாளும் காத்திருக்கும்'  எங்கள் இல்லத் தெய்வம் ஆனாய்! காத்திருந்து நோன்பிருந்து;  கனிந்த நற்பழங்கள் தந்து;  கரும்புடனே கொழுக்கட்டை கொண்டு;  அன்புடனே அருகம்பில்லாள்  ஆசையுடன் வணங்கி நிற்போம், ஆதரிப்பாய் எம்மையென்றும்  யானைமுக கணபதியே!  அன்புடனே தாள் பணிந்தோம்  ஆதரிப்பாய் கணபதியே!

குரு ராகவேந்திர

பூக்களின் குவியல் கீழே  புவியின் நாயகன் மேலே எங்கள்  புவியின் நாயகன் மேலே கண்களின் முன் எங்கள் குருவே  காவிரி போல் ஒரு தெளிவே  கருணை மலையாய் உருவே துயரினை போக்கவே வந்தான்  துங்க பத்ராவில் நின்றான்  தூய மந்திராலயம் தந்தான் மணம் தரும் மாலையில் கண்டோம் மகிழ்ச்சியை வாழ்வாய் கொண்டோம் மந்திராலயத்தில் நின்றோம் நாங்கள் மந்திராலயத்தில் நின்றோம் மனதில் அமைதி கொண்டோம் மண்ணில் விண்ணை கண்டோம்

குரு ராகவேந்திர

கண்ணன் இங்கு வந்ததென்ன  காமதேனு கொண்டதென்ன  எங்கள் குரு பெற்றதென்ன  எல்லாம் எமக்கு தந்ததென்ன மண்ணில் வந்து பிறந்த மன்னன் மாஞ்சாலம் கொண்ட கண்ணன் மண்ணை தின்ற கண்ணனைப் போல் மண்ணை தந்து காத்ததென்ன எத்தனையோ நிலம் கடந்து   எங்கள் துயர் தான் அறிந்து எல்லோர்க்கும் காவலனாய்  என்றும் எமை காத்த தென்ன நீல வண்ண கண்ணன் அவன்  நீதி சொன்ன காவல் மகன் நெஞ்சமதில் நிறைந்து நின்றே நிலைத்தெம்மை காத்ததென்ன

குரு ராகவேந்திர

நீரின்றி வேரில்லை நிலமின்றி பயிரில்லை நீயின்றி நானில்லை குருவே  நின் காலடி  சரணம் குருவே ஒளிதரும் விளக்கினில் உருகிடும் நெய்யது  உன் முகம் பார்த்திட உருகிடும் மனமது கண்ணொளி காட்டிடும் கருணையின் ஒளியது  கண்டதும் விலகிடும் வாழ்வதன் இருளது தோளது கொண்ட துளசியின் மாலையில் தூரம் தொலைந்திடும் துன்ப பிணியது  கனிந்திடும் உன் மனம் காட்டிடும் உன் கரம் வழியை நடந்திடும் கால்கள் மறந்திடும் வலியை கடந்திடும் வாழ்வின் சுமையை

அண்ணாமலை மீதிலே

அடி தேடும் மாதவனும் ;முடி தேடும் நான்முகனும்;  அனலாக காட்சி கண்டார் மலையாகவே ! திரு அண்ணாமலை யாகவே! கடை தேடும்மனிதருக்கு; விடையாகநின்றான் அவன் விடை மீதிலே; அருள் ஒளியாக காட்சி தந்தான்  மலை மீதிலே! அண்ணாமலை மீதிலே! வரும் வாழ்வின் ஒளி நாளில் ; விடை கூறும் மழை நாளில்; மலை தேடி வரும் மாந்தர் அலை போலவே ! ஆடும் அர்த்த நாரீஸ்வரர் முன்  இங்கு கடலாகவே!

ஈசன் நீயே உண்மையப்பா

அறியும் மனதில் சுடராய் ஒளியாய்  எறியும் தீபம் நீயப்பா அறியா மனதிலும் இருளை நீக்கும்  ஈசன் உந்தன் கருணை யப்பா எதிலும் விளங்கும் உண்மையைப்பா உலகொன்று படைத்தாய் உயிர்களில் நிலைத்தாய் உனையன்றி வேறெதும் இல்லையப்பா அன்னை தந்தையாய் ஆகி நின்றதும் அனைத்து உயிரிலும் தன்னை கொண்டதும் ஈசன் நீ  தந்த ஞானமப்பா நிலைக்கும் உலகின் வேதமப்பா ஈசன் நீயே ஞானமப்பா நிலைக்கும் உலகின் வேதமப்பா

அன்னை உண்ணாமுலையாள்

 அம்மா அம்மா அம்மா உண்ணாமலை நீ அம்மா காணவந்தோம் அம்மா  திரு அண்ணாமலைக்கு அம்மா அடிமுடி காணா அற்புத ஈசன்  தன்னை தந்தான் அம்மா  அவன் உன்னைக் கொண்டான் அம்மா எரியும் தீயாய் நிற்பவன் முன்னே  குளிர்ந்த காற்றாய் அம்மா  கோபம் தணித்தாய் அம்மா குணத்தால் வென்றாய் அம்மா அச்சமும் தீமையும் அழிந்திட்ட நேர்மையும் நிச்சயம் களைவாய் அம்மா  நெஞ்சில் நேசம் வளர்ப்பாய் அம்மா

அன்னை கங்கை யம்மன்

 அழகு அழகு பேரழகு கங்கையம்மன் நீ பேரழகு      உன்னைப் பார்க்கையில் கண்ணழகு  உன் புகழ் பாடும் குரலழகு உன்னை தேடிய காலழகு உன் முன் வணங்கும் கரமழகு உன்னை நினைக்கையில் மனமழகு உன் முன் நிற்கும் உடலழகு உன்னை காட்டும் விளக்கழகு  உன் முன் ஒலிக்கும் ஒலியழகு உன்னை அணைக்கும் உடையழகு  உன் முன் மலர்ந்த மலரழகு உன்னை போற்றும் மொழியழகு உன்னால் தானே உலகழகு உண்மையில்  அதுவே உன்னழகு

கலையின் வாணி

காலை கதிரவன் காட்டிடும் அழகு ; கலையின் ராணி வாணியின் அழகு! வீணை கொண்டது விரல்களின் உறவு; வெள்ளை தாமரை மீதவள் கனவு! உலகின் நாவில் உலவிடும் மொழியது உணர்வின் வழியாய் உண்மையின் ஒலியது! விழிகள் காணும் ஒளியின் நிறமது ; நிலைத்திடும் நினைவில் அவள் தந்த வரமது! விரல்களின் அசைவில் விளைந்திடும் பயிரது; வீணையின் நாதத்தில் வளர்ந்திடும் கலையது! செய்யும் தொழிலதில் வெற்றியின் வழியது; சேர்ந்திடும் செல்வம் தேவியின் அருளது! கலையின் வாணி காத்திடும் அழகது; கவிதைகள் சொல்லா மொழியின் அழகது! வான் கொண்ட அதிசயம் கண்களின் உறவது; வாணியின் அருளே வாழ்வதன் கனவது!

கவிராஜன் கனவே நீயம்மா

கவிராஜன் கனவே நீயம்மா மாகாளி கவிராஜன் கனவே நீயம்மா கண் இரண்டும் தீயாகி கைகளிலே வேல்தாங்கி  பல் இரண்டும் புலியாக பார்வைக்கு கனலான   (கவிராஜன்) இருள் தன்னை ஒளியாக்கி பொங்கும்  புது புனலாக்கி  சிங்கத்தின் மீதமர்ந்து சீறிவரும் எரிமலை நீ (கவிராஜன்) கைகளிலே வேல் எடுத்து கயவரை  தான் தடுத்து  காவலுக்கு வந்து நின்று காத்திருந்த தாய் காளி(கவிராஜன்)

கந்தன் நினைவே என்றிரு

கவலை மறந்திடு கனவை தொடர்ந்திடு கந்தன் நினைவே என்றிரு வேலை வணங்கிடு வேசம் கலைத்திடு வேடன் வருவான் என்றிரு வள்ளி மணாளன் வருவான் என்றிரு கடலின் ஓசையில் கந்தன் புகழதில் கருணை மழையதில் நனைந்திரு கந்தன் கருணையில் காட்டும் அன்பதில் கவலை பறந்திடும்  உணர்ந்திடு வேலின் கூர்மையில் கொண்ட நேர்மையில் சூரன் வீழ்ந்தான் பார்த்திரு வேண்டும் வேளையில் வேலன் பார்வையில் வேதனை இல்லை என்றிரு வேலவன் காப்பான் என்றிரு கந்தன் அவனை நினைத்திரு

பாண்டு ரங்கா விட்டல்லா

 விட்டல்லா விட்டல்லா பாண்டு ரங்கா விட்டல்லா பாடி வந்தோம் நாடி வந்தோம்  பண்டரிபுரம் விட்டல்லா உச்சி முதல் பாதம் வரை உன்னழகே விட்டல்லா கண்குளிர பார்த்து நின்றோம் கண்ணா எம் விட்டல்லா கண்டு எம்மை காத்திருப்பாய் காதலனே விட்டல்லா காலை மாலை மறந்து போனோம் கண்ணனே விட்டல்லா பொன்னின் நகை சூடி நின்றாய் பரந்தாமா விட்டல்லா பொன் மனதில் ஏற்றி வைப்பாய் என்றும் எமை விட்டல்லா

ஈஸ்வரனே பரமேஸ்வரனே

நின் விழி தரும் ஒளியில் விலகிடும் இருளது எங்கள் ஈஸ்வரனே நின்னருள் தரும் வழியில் நிதம் உன்னைத் தேடி நடந்திடும் கால்கள் ஈஸ்வரனே உருவொன்று கொண்டு உணர்வினில் நின்று உலகத்தை காத்திடும் ஈஸ்வரனே அருவமாய் வந்து அருகினில் நின்று அண்டத்தை காக்கும் பர மேஸ்வரனே வாழ்வதை தந்து வாழ்ந்திட நின்று வழிசொல்லி அழைத்திடும் ஈஸ்வரனே கனவொன்று காட்டி நனவொன்று நடத்தி கடைசியில் கலைத்திடும் பர மேஸ்வரனே உலகென்ற ஒன்று உயிர் தந்து இன்று உறவினில் நின்றது ஈஸ்வரனே உயிர் கொண்ட உடலது உலகதை மறந்து உன்னுடன் கலந்தது பரமேஸ்வரனே ஈஸ்வரனே பரமேஸ்வரனே பணிந்திடும் விழிகளில் பாதையின் இருளதில் ஒளிதந்து வழி நிற்பாய் ஈஸ்வரனே

குரு ராகவேந்திர

ராம நாமமும் கிருஷ்ண கீதையும் தாங்கி தந்த குருவே  அரியின் வடிவிலே ஆள வந்தவன் ஆக்கி தந்த வழியே ஆள வந்தாய் குருவே நீ  ஆக்கி தந்தாய் வழியே வாழும் வழியதில் வாசலாகி நீ வாழ்வை தந்த குருவே வாட்டம் போக்கவே வாழ்வை காக்கவே   மூல ராமன் கண்ட குருவே  கண்ணன் சொன்னதை காலம் வென்று நீ கரைத்து தந்த குருவே காணும் விழிகளில் காட்டு வழியதில்  காத்து நின்ற குருவே அன்பின் நேசத்தை அரியின் வேசத்தில் காத்து நின்ற உருவே காவலாகி என்றும் காக்கும் என்பதை  காட்டி தந்த குருவே ராஜனாக நிற்கும் குருவே எங்கள் ராகவேந்திர குருவே

ஈசன் அவனே நிறமாலை

எத்தனை அழகாய் மலர்மாலை  எங்கள் ஈசன் அருள் மாலை கண்கள் கண்டது நிறமாலை  காததது கேட்டது புகழ்மாலை  ஈசன் உந்தன் புகழ்மாலை மங்கள வாரத்தின் அருள் மாலை  மயங்கும் கதிரவன் நிற மாலை கால்களின் நடனம் தரும் மாலை காளையின் கொம்பிடை உன் மாலை கண்டோம் கண்டோம் பொன்மாலை காற்றினில் ஈசன் புகழ் மாலை காத்திடும் ஈசன் புகழ் மாலை

சுவாமி ஐயப்பன்

பம்பை யாற்றின் படிதனில் நின்று பணிந்திடும் எங்கள் கரங்கள் பார்த்திடும் மலைதனை விழிகள்  சபரி மலைதனை எங்கள் விழிகள் கல்லும் கரைந்திடும் கடுங்குளிர் நீர் அதில் கரைந்திடும் பாபங்கள் பம்பையில் கால்கள் பலங் கொண்டு காட்டிடை கடந்திடும் களிப்புடன் ஏறிடும் மலையில் சபரிமலையில் சரணம் பாடிடும் சரங்கொத்தி கடந்திடும் சாஸ்தாவை நாடிடும் மனமே சரணம் சரணம் சரணம் ஐயப்பனை சந்திக்க வந்தோம் வரமே பாதங்கள் செய்த புண்ணியம் கோடி பதினெட்டாம் படிதனில் கூடி பாதம் வைத்தோம் உன்னை பார்த்திடவே  இங்கு ஒவ்வொரு படியாய் ஏறி சரணம் சரணம் சரணம் ஐயப்பா  சாமியே சரணம் சரணம் ஐயப்பா

குரு ராகவேந்திர

 என்றென்றும் ஒளியாக நீ வாராய் -   எங்கள்  கண் ணென்றும் ஏங்கிடும் நீ வாராய் மண் நின்று வாழ்ந்திட வரம் தாராய் - எங்கள் மத்வரின் சீடரே நீ வாராய் வானின் ஒளியாக முன்வந்து வரம் தந்தான் மூல ராமனே முன்நின்று கரம் கொண்டான் தணியாத அருள்தாகம் தனைக் கண்டான் தன்னையே தந்துனக்கு அதை வென்றான் காணாத ஒளிகாண கண்தந்தாய் -எங்கள் காவலனாய் காத்திருந்து வழிதந்தாய் மண்மீது வாழ்வதில் ஓர் பயன் தந்தாய் -எங்கள் மத்வரின் சீடரே நீ எமை வென்றாய்

அன்னை புவனேஸ்வரி

 அருள்வாள் நமக்கு என்றும் அவளே  அன்னை புவனேஸ்வரி அன்னை அவளே என்றும் நம்மை  ஆளும் புவனேஸ்வரி சுழலும் பூமியின் சூட்சுமம் அவளே  அன்னை புவனேஸ்வரி சுற்றம் தந்த சொந்தம் அவளே  அன்னை புவனேஸ்வரி அழகாய் அமர்ந்து ஆட்சி செய்வாள்  அன்னை புவனேஸ்வரி அகிலம் காக்கும் அதிசயம் அவளே  அன்னை புவனேஸ்வரி மண்ணில் எங்கள் மா தவம் நீயே  அன்னை புவனேஸ்வரி மாறும் உலகில் மாறா ஒளியே  அன்னை புவனேஸ்வரி

கைலாயபதியே

 பனிசூழ் கைலாய திபதியே கரம்சூழ் கயலவள் கரம் கொண்டவனே ஆநிறை சூழ் விடமதில் அமர்ந் தவனே வினைசூழ் வாழ்வதை விடுவிப் பாயே

சிவனே எமக்கு போதுமய்யா

 இந்த புன்னகை போதுமய்யா அழகு சுந்த ரேஸ்வரய்யா உன்னை கண்டதும் துயரமெல்லாம் தூர விலகி போனதய்யா பொன்னாய் மின்னும் முகமய்யா புண்ணியம் உன்னை கண்டதய்யா அழகிய மாலை தோளிலய்யா ஆள்பவன் உனக்கே அழகய்யா எங்கள் ஈசனே என்றுமய்யா எம்முடன் வாழ்ந்திட வேணுமய்யா

ஆதி சிவனே போற்றி

 நீ அழகிய கருணா மூர்த்தி எம் ஆதி சிவனே போற்றி வாழ்வது நிலையில்லை வருவது முன்னில்லை வழியில் ஒளியில்லை மூர்த்தி வருவாய் தருவாய் கீர்த்தி இதயத்தில் வலியில்லை உதயத்தில் இருளில்லை வாழ்வதில் எல்லாம் மூர்த்தி வந்தாய் தந்தாய் கீர்த்தி

ஆதிரை ஈசன்

கண்ணார கண்டோம் உன்னையே நின்னையே ஈசனே திரு ஆதிரை நாளதில் ஊர்திரை நீக்கியே கண்ணார கண்டோம் உன்னையே தாயவள் பக்தையின் தவிப்பதை நீக்கியே சேந்தனின் உயிரதை பூமியில் நிறுத்தியே தந்த எம் ஈசனின் காலடி போற்றியே  கண்ணார கண்டோம் உன்னையே ஆடிய பாதத்தில் அருள் தரும் கரமதில்  தேடிடும் விழியுடன் தேவாரம் பாடியே கண்ணார கண்டோம் உன்னையே களியுண்ண வந்தவன் காட்சியில் மயங்கியே கலியின்று கீர்த்தியும் என்றுனை எண்ணியே கண்ணார கண்டோம் உன்னையே நின்னையே ஈசனே

மேய்ப்பவர் யேசு

இரட்சிக்க வந்தவர் யாரோ குழந்தை  யேசு தானோ தந்தவள் காத்தது யாரோ  மாதா மேரி தானோ அன்பெனும் விதையின் வேரை ஆழ விதைத்தது நீரோ மேய்ப்பன் யேசு உன் பேரோ ஆயிரம் தலைமுறை தாண்டி  பாபம் தீர்க்கும் நீரோ அதுவே அன்பெனும் ஆறோ இதயத்தின் வாசலில் என்றோ வந்தெமை காத்தது நீரோ என்றும் என்றும் எம்மை ஏந்திடும் கரமே உம்மை ஏற்றோம் ஏற்றோம் உண்மை

அன்னை சாமுண்டி

நீல வண்ண பட்டுடுத்தி  நிலத்தில் கண்கள் தனை நிறுத்தி  பார்க்கும் பார்வையில் பக்தர்களை  காக்கும் தாயே சாமுண்டி மலைபோல் உயர்ந்த மன முடையாள்  மாலையும் மணிகளும் தான் உடையாள்  குன்றென நிமிர்ந்த குணமுடையாள்  மைசூர் தன்னில் நிலை கொண்டாள் ஆதி சிவனின் நாயகியே  ஆடும் காவிரி தந்தவளே அன்னை சாமுண்டீஸ்வரியே அன்பால் உலகை காத்திடுவாய் பார்க்கும் பார்வையில் கருமேகம்  பணிந்தே மழையாய் தான் இறங்கும் வீசும் சூலம் தனைக் கொண்டே  சூழ்ந்திட்ட தீமையை விரட்டிடுவாய்

ஏழுமலையான்

 ஏழு மலைகளின் நடுவில் கண்டேன்  இதயம் முழுவதும் உன்னை கொண்டேன் உயிரின் வேராய் உன்னை கொண்டேன் உன் முகம் கண்டபின் என் முகம் மறந்தேன் ஏழு நிறமதின் ஏக்கம் குறைந்தது ஏழு மலையான் தோள்களை பணிந்தது ஏங்கிடும் விழிகள் விடியலை கண்டது ஏனென்ற கேள்விகள் எங்கோ மறைந்தது கார்மேகன் அழகு மழையென நனைத்தது கண்ணனை நினைத்தே காலங்கள் நகர்ந்தது

அன்னை லஷ்மி

தாமரை மலரே தாங்கிய பாதங்கள் தவழ்ந்திடும் புன்னகை மீதவள் வரங்கள் ஏந்திய செல்வங்கள் இறைத்திட்ட கரங்கள் எங்களின் வாழ்விற்கு விதைத்திட்ட உரங்கள் அழகிய தாமரை ஏந்திய கரங்கள் அன்னை லக்ஷ்மியின் அருள்தரும் விழிகள் நிலவென முகமது தந்திடும் ஒளிகள் நீக்கிடும் இருளதை நிலைத்திடும் வழிகள் கருணையின் வடிவாய் கண்முன் குலமகள் மாதவன் மணமகள் மறைந்தன கவலைகள்

சுவாமி ஐயப்பன்

தரணியாள வந்து நின்றான் சுவாமி ஐயப்பன் தகப்பன் சுவாமியின் தமையனான் சுவாமி ஐயப்பன் எங்கள் இதயக் கோயில் வாழும் உயிராய் எங்கள் ஐயப்பன் ஏழு மலையான் தந்த செல்வம் சபரி ஐயப்பன் புலியின் மீது ஏறி வருவான் எங்கள் ஐயப்பன் புவியில் யாரும் தேடி வணங்கும் தெய்வம் ஐயப்பன் கண்ணுக் கழகாய் காட்சி தந்திடும் குழந்தை ஐயப்பன் காண வந்திடும் கூட்டம் காக்கும் கருணை ஐயப்பன் சாமி சரணம் சாமி சரணம் சாமி ஐயப்பா சரணம் நீயே சரணம் நீயே சாமி ஐயப்பா

உத்தமன் மாலவன்

மலையென நின்று மனதினை வென்று மகிழ்வுடன் வாழ்ந்திட வேண்டும் மலையப்ப சாமியின் அருளால் இந்த  மாநிலம் செழித்திட வேண்டும் சென்றன சென்று நன்றென நன்று  நம் வாசல் வந்திட வேண்டும் செல்வத் திருமகள் சேர்ந்த மணமகன்  மாலன் கருணை வேண்டும் வாயில் கடந்து வாழ்ந்திட சென்று  வாழ்வை வென்றிட வேண்டும் வாசல் கடந்து(பரமபத) வந்திடும் மாதவன்  மானுடம் காத்திட வேண்டும் உணவை மறுத்து உடலை மறந்து  உன் புகழ் பாடிட வேண்டும் உலகை யளந்தவன் உத்தமன் மாலவன் உன் துணை என்றும் வேண்டும்

ஆதவன்

ஆதி உலகின் அருள் பெரும் முதல்வா அருணன் ஓட்டும் தேரின் தலைவா தீயின் வடிவில் ஒளிதரும் சுடரே தீங்கின்றி எம்மை காக்கும் பயிரே கரங்களில் தாமரை மலர் கொண்ட அழகே காலமும் நேரமும் உன் விரல் அசைவே இயக்கத்தின் இயக்கத்தை இயக்கிடும் இயல்பே இன்முகம் காட்டி காப்பதுன் கடனே

குரு ராகவேந்திர

கரம் ஒன்று தருவார் பலம் தந்து அருள்வார் பூஜ்யஸ்ரீ ராகவேந்திரர் தான் கரம் கொண்டு தொழுது கண்ணிமை மறந்து கால்களில் பணிவோம் குருவிடம் தான் பூஜ்யஸ்ரீ ராகவேந்திர குருவிடம் தான் மூல ராமனை இதயம் கொண்டவர் முடிவில்லாத வாழ்வில் நுழைந்தவர் எளியவர் வாழ்வின் இதயம் தான் இருளதன் வழியதில் ஒளியவர் தான் இறைவழி தந்த பகலவன் தான் என்றும் வாழ்வதன் வழியவர் தான்  பூஜ்யஸ்ரீ ராகவேந்திரர் தான்

கணபதி

 கண்ணுக்குள் நிறைந்த கடவுளைப் பாரு  கணபதி இன்றி வேறிங்கு யாரு மண்ணுக்குள் விளைந்த மஞ்சளின் வேரு  மங்கல வடிவாய் நம் பிள்ளையாரு நம்பிக்கை தரும் அவர் தும்பிக்கை பாரு  நல்லது தொடங்க முன் வருவாரு நெற்றியில் நீறுடன் பலம் தரும் மேரு  நிலமகள் தந்த செல்வத்தின் பேரு தடையின்றி செல்ல வழி தந்த தாரு தாங்கிடும் கணபதி தோள் தருவாரு

ஈசன் மகேசன்

வெள்ளிப் பனி சடையன்  விதி வெல்லும் திருக் கடையன்  கண்ணில் ஒளிர் தீயன்  வளர் கங்கையவள் கொண்ட நேயன் மண்ணில் அவன் மாயன்  திரு மாலன் கரம் தந்த மாமன் வண்ண மலர் அணி சோமன்  மகிழ் வாழ்வின் உயிர் தரும் காமன் தன்னில் உமை கொண்ட பாகன்  தாய் தனை போல் எங்கள் ஈசன்

லஷ்மி நாராயணன்

 தாமரை மலரில் வீற்றிருப்பான்  தங்கமாய் எம்மை காத்திருப்பான் தாயவள் தன்னுடன் நாராயணன்  எங்கள் லஷ்மி நாராயணன் ஆழ்கடல் தன்னில் அலையுடனே  ஆதிசேஷன் அவன் நிழல் தனிலே   குளிர்தரும் நிலவாய் நாராயணன்  எங்கள் லஷ்மி நாராயணன் தேடிடும் செல்வம் தந்திடுவான்  தென்மலை வேங்கட கிரி யாள்வான் கூடிடும் அருளால் காத்திடுவான்  நாராயணன் லஷ்மி நாராயணன் பாடியெம் மொழியால் அழைத்திடுவோம் பார்த்த சாரதி புகழ் பாடிடுவோம் கூடியெம் குலத்துடன் வணங்கிடுவோம்  கோபாலன் துணையென வாழ்ந்திடுவோம்

அன்னை அபிராமி

கையில் நிலவை தாங்கி வந்தாள் அவள்  அன்னை அபிராமி தகிக்கும் கனலை அனைக்க வந்தாள்  குளிர் நிலவென அபிராமி சூலம் கையில் ஏந்தி வந்தாள்  சுடர் ஒளியென அபிராமி சூழும் மேகமாய் இறங்கி வந்தாள்   இடி மின்னலாய் அபிராமி கையில் மலரதை காட்டி நின்றாள்  அருள் வடிவாய் அபிராமி காலம் அறிந்து கருணை செய்வாள்  எங்கள் காவல் அபிராமி அன்னை அபிராமி  அருள் பார்வையில் அபிராமி எம்மை அபிராமி  என்றும் காப்பவள் அபிராமி

அகிலாண்டேஸ்வரி

 தாமரை மாலையை அணிந்து வந்தாள் தலையினில் மல்லிகை சூடி நின்றாள் ஈசன் துணைவியாய் வாழ்ந்தி ருப்பாள் ஈஸ்வரி அகிலாண்டேஸ்வரி காத்திருப்பாள் காவிரி பாய்ந்து கரையேரும்  ஈசன் கால்கள் பணிந்து கடல்சேரும் திருவானைக் காவலில் கால்நிலைத்தே காப்பாள் அன்னை அகிலாண்டேஸ்வரியே

ஏழுமலையதின் தலைவன்

 மண்ணைத் தாங்கி மீட்டு வந்தவன்  மலையப்பன் வேங்கடன் நீயே பொன்னைத் தாங்கி பொருளாய் நின்றவன் பூமியின் காவலன் நீயே ஏழு மலைகளின் தலைவன் எங்கள் இதயம் கொண்டவன் நீயே ஏங்கும் இதயம் உன்னை காண  ஏறி வந்தோம் ஏழு மலையே பொன்னும் மணியும் புதிதாய் வைரமும்  மின்னும் மேனி உன்னழகே பொல்லா வினையும் தீர்க்கும் கரமே  போதும் என்றது மனமே கண்ணுக் கழகாய் காட்சி தந்தாய்  காக்கும் கண்ணனே நீயே காலம் மறந்து கண்கள் கரைந்து  கண்டு மகிழும் உயிரே என்றும் கண்டு மகிழும் உனை யெங்கள் உயிரே

எம் அழகன் முருகன்

எம் அழகன் பொன் அழகன் எங்கள் குல வேலன்  வந்து முன்னே காத்திருப்பான் வள்ளி மணவாளன் ஆறுபடை வீடு கொண்ட அழகன் அவன் முருகன் அழகு மயில் வாகனத்தில் ஏறி வரும் சூரன் வேல் எடுத்து வினை தீர்க்கும் வேந்தன் செந்தூர் வேலன் வெற்றி மாலை தோள் நிறைக்கும் தெய்வம் அவன் அழகன் காவடிகள் ஆடிவரும் கால்கள் மலை ஏறிவரும் கண் திறப்பான் முருகன் காவலாக என்றும் வரும் கவலை யில்லா வாழ்வு தரும்  கருணை அவன் முருகன்

குரு ராகவேந்திர

இராம நாமம் தந்த ஞானம் உன்னில் உன்னை கண்டதே ராகவேந்திரா என்னும் நாமம் எம்மை எமக்கு தந்ததே ராகவேந்திரா ராகவேந்திரா ராகவேந்திரா நாமமே நாளும் வாழ்வின் கவசமாக எம்மை காத்து நின்றதே நீ சூடும் மாலை சுகந்தம் நின்று வாடும் வாழ்வை நீக்குமே நின் நெஞ்சில் சுமக்கும் மூல ராமன் வாழும் வழியை காட்டுமே மனித வாழ்வின் மகிழ்வை உந்தன்  மந்தி ராலயம் கூட்டுமே மண்ணின் ஞானி உன்னைத் போற்றி  மனிதர் உள்ளம் பாடுமே ராகவேந்திரா ராகவேந்திரா ராகவேந்திரா நாமமே நாளும் நாங்கள் உன்னைப் பாடும்  நன்மை செய்யும் கீதமே

வடிவேலன்

எரிகின்ற விளக்கொன்று தருகின்ற சுகம் போல  எம் வேலன் முகம் தந்தது என் உணர் வெல்லாம் நெய்யாகி  வளர்தீப தீயாகி முருகா உன் முகம் கண்டது வேல் ஏந்தும் கரம் ஒன்று வினை தீர்க்கும் கரம் ஒன்று முன் நின்று எமைக் காத்தது மதயானை தோள்மீது நீ கொண்ட மலர்மாலை மணம் சூழ்ந்த வாழ்வானது வரும் நேரம் எல்லாமே வளமான பொன் நேரம் வடிவேலன் நீ தந்தது வருவாய் எம் அழகா நீ அருள்வாய் எம் குமரா நீ கரம் கூப்பி முன் நின்றது

குருவே ராகவேந்திரா

வானின் கிழக்கு வெளுத்தது பார் ! வர்ண ஜாலங்கள் செய்தது யார் ? மனதின் இருளது மறைந்தது  பார் ! மாயம் செய்த குருவும் யார்? உயர்ந்த மலைபோல் உள்ளம் பார் ! உயர்ந்த வாழ்வதை தந்தது யார்? கண்ணில் வழியும் காவிரி பார்! காய்ந்த வாழ்வில் ஈரம் யார்? துயரை துடைக்கும் கரங்கள் பார்! துளசி மாலையில் தூயவன் யார்? மத்வர் செய்த மாயம் பார்! மண்ணைத் மருந்தாய் தந்தவன் யார்? மந்திர ஆலயம் வந்து பார்!  மயக்கம் தீரும் குருவைப் பார் ! ராகம் தந்த கீதம் பார்! ராகவேந்திர குருவைப் பார்! ராகவேந்திரா! ராகவேந்திரா!  ராகவேந்திரா! ராகவேந்திரா!

ரங்கா ரங்கா பாண்டுரங்கா

ஓடி வந்தேன் ரங்கா ரங்கா  உனைத் தேடி வந்தேன்  பாண்டு ரங்கா ரங்கா ஆற்றங்கரை தன்னில் விளக்கேற்றி  அழகாய் நீரில்  மிதக்கவிட்டு  நகரும் அழகை பார்த்திருந்தேன்  நாராயணன் புகழ் பாடி நின்றேன்  ரங்கா ரங்கா எம் ரங்கா  பண்டரிபுரம் வாழ் பாண்டு ரங்கா பாடி உன்னை நாடி வந்தேன்  பாண்டு ரங்கனை காண வந்தேன்  மோதும் கூட்டம் கடந்து வந்தேன்  மோகனன் அழகை காண வந்தேன் கண்டேன் கண்களில் உனைக் கண்டேன் கடலின் வண்ணன் உயிர் கொண்டேன் பாண்டு ரங்கனை பாடி நின்றேன்  பகலும் இரவும் மறந்து நின்றேன்  ரங்கா ரங்கா எம் ரங்கா  பண்டரிபுரம் வாழ் பாண்டு ரங்கா

ஈசனே எம் நேசனே

மங்கள நாதனே  மறை கண்ட மாயனே  திரு மங்கலகுடி வாழ் ஈசனே எம் உள நேசனே இமயத்தின் வாசனே நின் றெமை காக்கும் ஈசனே ஈசனே ஈசனே எம் நேசனே கடல் அன்று உமிழ்ந்த விடம் தனை உண்டு விண்ணவர் காத்த நேசனே கண்ணப்ப நாயனின் கண்களில் நின்று கருணை செய்த ஈசனே ஈசனே ஈசனே எம் நேசனே மலைமகள் கொண்டு மண்ணில் நின்று மனதினை வென்ற ஈசனே மாலைகள் சூடி மலர்கள் தூவி மறந்தெமை நின்றோம் ஈசனே ஈசனே ஈசனே எம் நேசனே

கணபதியே

 அரசும் கரும்பும் அன்புடன் வைத்து ; அழகு மாலைகள் சூட்டி மகிழ்ந்து; இனிய பழங்கள் இயன்றதை வைத்து; பாதம் பணிந்தோம் பாடி மகிழ்ந்தோம் பரமன் மகன் முன் கூடி மகிழ்ந்தோம் தடைகள் இல்லா பாதையை காட்டி ; தயங்கும் மனதில் உற்சாக மூட்டி; நம்பிக்கை வளர தும்பிக்கை காட்டி; நாளும் காக்கும் நாயகன்முன்னே! பாதம் பணிந்தோம் பாடி மகிழ்ந்தோம் பரமன் மகன் முன் கூடி மகிழ்ந்தோம் நாங்கள் வணங்கும் நாயகன் விநாயகன் நல்லருள் வேண்டி நன்மைகள் தேடி பாதம் பணிந்தோம் பாடி மகிழ்ந்தோம் பரமன் மகன் முன் கூடி மகிழ்ந்தோம்

வேலவன் அவனே

வேலுடன் மயிலுடன் யார் வருவார் ? வேலன் அவனின்றி இங்கு யார் தருவார்! கூடும் முகில் போல் யார் வருவார்? கொட்டும் மழை தன்னை  இங்கு யார் தருவார்! மனதில் குறையெதும் எமக்கு இல்லை; மறையவன் மைந்தனால் குறைவுமில்லை! ஓடும் நதியின்றி உயிர்கள் இல்லை; ஓம் என்னும் சொல்லின்றி உயர்வு மில்லை! கண்கள் காண்பது கனவுமில்லை; காப்பான் வேலன் என்றும் பொய்யுமில்லை!

குருவே அருளே

உண்மை ஒன்று சொல்வேன் ; உன்னை வணங்கி சொல்வேன்; கண்களில் வழியும் கருணை எங்கள்  கங்கை என்றே சொல்வேன்! கண்கள் காட்டும் ஒளியில்; காரிருள் எண்ணம் மறையும் ; கலங்கம் இன்றி உள்ளம் எங்கள்  குருவின் பாதம் பணியும்! மன்னன் காட்டிய வழியில்; மனிதர் கால்கள் விரையும்; மாமுனி உந்தன் முன்னே முழு நிலவும் கூசி மறையும்! குளிர் தரும் ஒளியே; விழியே; குருவே எங்கள் வழியே! தருவாய் நிழலாய் புவிக்கு; தந்திடு நிம்மதி எமக்கு!

அஞ்சனை மைந்தன்

தீயை உண்டு தீயை வென்று தீக்கிரை தந்த தீரன் யார்? தீயவன் சிறையில் தாயவள் கண்டு துயரம் நீக்கிய தூயவன் யார்? அண்ணல் ராமன் நாமம் பாடும்  அனுமனைத் தவிர வேறிங்கு யார்! அஞ்சனை மைந்தனை அண்ணலின் துணைவனை  அன்புடன் வணங்கி வாழ்ந்து பார்! அச்சங்கள் மறைந்து ஆற்றல் எழுந்து  உச்சங்கள் தொடுவாய் உண்மை பார்! ஏந்திடும் கதையுடன் ஏற்றிடும் கரத்துடன் காட்டிடும் கனிந்த முகமதைப் பார்! கவலை மறந்து காலம் கடந்து  வாழ்ந்திட வைக்கும் அனுமன் பார்!

வடிவேலன்

மாலன் மருகன் வேலன் வருவான்  மயில் தன்னில் ஏறி எமைக் காக்க மனதின் கவலையில்  மயங்கிடும் கண்களை  கரம் கொண்டு துடைப்பான் உயிர் காக்க வருவான் வருவான் வடிவேலன்  தருவான் ஆறுதல் ஞானவேலன் அழகிய மாலைகள் தோள்களிலே  அற்புத ஆரங்கள் மார்பினிலே வண்ண ஆடைகள் இடையினிலே வடிவேலன் மயிலின் மடியினிலே வருவான் வருவான் வடிவேலன்  தருவான் ஆறுதல் ஞானவேலன் கரைந்திடும் துன்பங்கள் ஆற்றினிலே கவலைகள் பறந்திடும் காற்றினிலே விளைந்திடும் இன்பம் வாழ்வதிலே வேலன் விழிதரும்  தினமருளே

மீனாட்சி

பச்சை வண்ண பட்டுடுத்தி; பாடும் கிளியை விரல் நிறுத்தி; உச்சியில்  பொன்முடி பின்னிருத்தி; ஊரை காப்பவள் மீனாட்சி! அழகாய் வைர மூக்குத்தி; ஆடும் அதிசய புல்லாக்கு; எடுப்பாய் நெற்றியில் ஒரு பொட்டு; ஏன் என்று கேட்கும் முகவெட்டு! அண்ணன் அழகன் கரையிறங்கி; கைத்தலம் தந்தான் மனங்கலங்கி; சொக்கன் ஈசன் உடன் மயங்கி; ஊரை காப்பவள் மீனாட்சி!

வலிமையின் வடிவே நரசிம்மா

வளமும் வலிமையும் வாய்த்திட வேண்டி; வந்து நின்றேன் உன் கண்முன்னே! வலிமையின் வடிவே வாய்மையின் மொழியே; வந்தருள் வாயே              ஸ்ரீ நரசிம்மா! கொண்டவள் மடியில் கொஞ்சிய மொழியில்; கோபம் தணிந்த குணவடிவே! அஞ்சிடும் கோலத்தில் அரக்கனை அழித்து; அன்புடன் அணைத்த அருட்கரமே! எங்கெங்கு காணினும் இறைவன் இருப்பான்; என்பதை விதைத்த விளைநிலமே! எல்லாம் நீயே வல்லான் நீயே; அருள்வாய் தருவாய் தாயுடனே!

சிவாயம் சிவாயம் சிவாயம்

 [18/04/2022, 2:56 pm] Ramkumar n: சிவாயம் சிவாயம் சிவாயம்  சிவனே நமக்கு உபாயம்! அபாயம் நீக்கும் சிவாயம் அபயம் வேறில்லை சிவாயம்! ஆதியே அந்தமே சிவாயம்  அருவின் உருவே சிவாயம்! பிறையின் வடிவதில் சிவாயம்  பிறப்பின் இறப்பே சிவாயம்! ஜோதியின் ஒளியில் சிவாயம்  சூரியன் நெற்றியில் சிவாயம்! ஆடும் கால்களே சிவாயம்  ஆனந்த நடனம் சிவாயம்! மேனியின் சாம்பல் சிவாலயம் மீட்டிடும் உயிரை சிவாயம்! கண்டத்தின் விடமே சிவாயம்  காட்டிடும் கருணையின் சிவாயம்! நாகத்தின் மாலையில் சிவாயம்  நஞ்சையும் வென்றிடும் சிவாயம்! பாடிடும் உடுக்கையும் சிவாயம்  பரமனின் மொழியாய் சிவாயம்! புலியின் ஆடையில் சிவாலயம்  பூமியின் போர்வையாய் சிவாயம்! வில்லனுடன் அம்புடன் சிவாயம்  வீர ருத்ரனே சிவாயம்! கொண்டவள் சக்திக்கு சிவாயம்  கொடுத்ததே பாதியை சிவாயம்! கையிலையின் வாழ்வாய் சிவாயம்  காத்திடும் உயிரே சிவாயம்! என்றும் எங்கள் சிவாயம்  ஏங்கிடும் விழிகளில் சிவாயம்! கண்களின் ஒளியாய் சிவாயம்  காட்டிடும் வழியை சிவாயம்! அடியாய் முடியாய் சிவாயம்  அண்ணா மலையில் சிவாயம்! ...

ரங்கா ரங்கா

பொன்னாய்  மணியாய் புடைசூழ் நகையாய் முத்தாய்  பவழ முடிசூழ் அணியாய்  கண்ணாய் ஒளியாய் மலர்சூழ் வழியாய்  மலராய் வண்ண தோள் சூழ் மாலையாய் மலராய் மழையாய் நீர்சூழ் சூழ் வயலாய் உயிராய் வழியாய் வளம்சூழ் வாழ்வாய் அருள்வாய் அரங்கா அன்புடன் எமக்கே

‌கணபதி

கண்ணை மூடி திறந்தாள் அங்கே  காணும் தெய்வம் கணபதி தானே  காட்சியில் எளிதாய் கருணை முகமாய்  கண்முன் வருவதும் கணபதி தானே மஞ்சள் பிடித்து வைத்தால் போதும்  வந்து நிற்பவன் கணபதி தானே மனிதர் வாழ்வின் தடைகள் நீக்கி  மாநிலம் காப்பவன் கணபதி தானே  அருகம் புல்லின் அற்புத சக்திகள்  அறிந்தவன் தெளிந்தவன் கணபதி தானே  அன்புடன் உடைத்திடும் தேங்காய் போதும்  அற்புதம் செய்பவன் கணபதி தானே  அழகன் குமரன் அண்ணன் எங்கள்  ஆருயிர் தெய்வம் கணபதி தானே  ஐந்து கரங்கள் கொண்ட கோமகன்  கொஞ்சிடும் குழந்தை கணபதி தானே

பழனி

 பழம் நீ என்றே பாடி வந்தோம் உன்னை  பழநி மலை தேடி பசி துயர் எல்லாம் மறந்தே வந்தோம்  பாலன் உனை நாடி பாலகன் முருகனே பார்வதி மகனே பழநி வாழ் முருகா தாயவள் தந்த வேலுடன் நின்ற வேலவன் நீ முருகா ஊரது கூடி பேரது பாடி காவடி ஆடிடுமே வேல் கொண்ட நாளிதை தேர் கொண்டு ஆடி ஊர் நின்று பாடிடுமே தனியாய் வந்தாய் தாயுடன் நின்றாய் தைப் பூச நாளிதிலே  வாங்கிய வேலால் நீங்கிடும் தீமைகள் காத்தாய் நீ எமையே முருகா முருகா முருகா முருகா காத்தாய் நீ எமையே