யானை முகத்தானை பார்
அதிசயம் இங்கே பார் ஆணை முகத்தானை பார்,
சந்தணக் கோலத்தில் சாந்தியை அருளும் சாந்த விநாயகன் பார்,
வெள்ளிப் பனிமலை நாயகன் மைந்தனை நித்தம் நினைத்துப் பார்,
நெஞ்சம் குளிர்ந்து நிலவாய் ஒளிர நிம்மதி வந்திடும் பார்,
மயக்கும் மாலைகள் பார் அருளும் கரங்களைப் பார்,
தும்பிக்கையான் தரும் நம்பிக்கையால் இல்லம் இனித்திடும் பார்
உள்ளம் மலர்ந்திடும் பார்
அதிசயம் இங்கே பார் யானை முகத்தானைப் பார்
Comments
Post a Comment