சதாசிவமானது

மதுரை யம்பதி மானுடம் தந்தது; காடுகள் கரைகள் கால்கள் கடந்தது 

ஞானமும் அறிவும் நல்லோர் தந்தது நமசிவாயமே நாவில் நின்றது 

சகலமும் கற்று சதாசிவமானது ;பிரும்மத்தை உணர்த்தி பிரும்மேந்திரரானது

இறையை இசையால் வடித்து தந்தது; எங்கும் காண்பவர் காட்சியானது 

மாயம் செய்தது மனதில் நின்றது; வாதில் வென்றது மௌனமானது 

புதுகை மண்ணில் புதுமை செய்தது ; கருவூர் வந்தது கருனை கொண்டது 

நெருவூர் சென்று நிலைத்து நின்றது ;காவிரி மண்ணில் காயம் மறைத்தது 

காலகாலமாய் காத்து நிற்பது, கருணை மழையே சதாசிவமானது

Comments

Popular posts from this blog

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்