Posts

சதாசிவமானது

மதுரை யம்பதி மானுடம் தந்தது; காடுகள் கரைகள் கால்கள் கடந்தது  ஞானமும் அறிவும் நல்லோர் தந்தது நமசிவாயமே நாவில் நின்றது  சகலமும் கற்று சதாசிவமானது ;பிரும்மத்தை உணர்த்தி பிரும்மேந்திரரானது இறையை இசையால் வடித்து தந்தது; எங்கும் காண்பவர் காட்சியானது  மாயம் செய்தது மனதில் நின்றது; வாதில் வென்றது மௌனமானது  புதுகை மண்ணில் புதுமை செய்தது ; கருவூர் வந்தது கருனை கொண்டது  நெருவூர் சென்று நிலைத்து நின்றது ;காவிரி மண்ணில் காயம் மறைத்தது  காலகாலமாய் காத்து நிற்பது, கருணை மழையே சதாசிவமானது

கண்கள் காண வரம் வேண்டும்

 வேண்டுமய்யா வரம் வேண்டும்  உன்னைக் காண வர வேண்டும் மனதில் மகிழ்வுடன் வர வேண்டும்  மந்திராலயம் வர வரம் வேண்டும் காலங்கள் கடந்தும் ஆள்பவனே  காவிரி கரையின் மூலவனே துன்ப துயரங்கள் துடைப்பவனே துங்க பத்ராவில் வாழ்பவனே வேண்டுமய்யா வரம் வேண்டும் உன்னை காண வர வேண்டும்  வீணை கொண்ட வாணியவள்  விரும்பி அழைத்த சூரியனே காண வேண்டும் உன் விழியை கருணை செய்வாய் காவலனே வேண்டுமய்யா வரம் வேண்டும்  உன்னை காண வர வேண்டும்  கண்களில் கனவுகள் வரவேண்டும்  கருணை மழையே வரம் வேண்டும்  கால்களில் வலுவை தர வேண்டும்  காண உன்னிடம் வர வேண்டும்  வேண்டுமய்யா வரம் வேண்டும் உன்னை காண வர வேண்டும்

ஆதிசிவன் அற்புதம்

 அடடா! அடடா! அற்புதமே! ஆதிசிவன் மடி அற்புதமே! காதில் சொல்பவன் அற்புதமே ! கார்த்திகேயன் அவன் அற்புதமே! வாரி அனைத்திடும் வானவன் கரங்கள் ; பாசம் காட்டிடும் பரமனின் கண்கள் ! மடியேறி அமர்ந்திடும் மழலை முருகன்; மந்திரம் சொல்லி தந்திடும் தலைவன் ! சொல்வதை அன்புடன் ஏற்றிடும் ஈசன்; சொல்லி தந்தவன் சுவாமி நாதன்! நல்லதை ஏற்க நாடகம் புரிந்தவன்; நமசிவாயனே நம்மை காப்பவன்! அற்புதம்! அற்புதம்! அற்புதமே ! ஆதிசிவன் என்றும் அதிசயமே!

முழுமதி சூடிய அழகர்

திங்களார் முழுமதி கரைந்த பிறை தனை தன்முடி சூடிய அழகரோ? மங்கையார் யெனும் பனி கங்கையை  தன் தலைதனில் மறைத்த கள்வரோ? அரவலார் வாசுகி உமிழ் நச்சதில் வீழ்ந்த  தேவ வசுரரை காத்த நீலகண்டரோ? சடையராய் சிவந்த தீயதில் எரியும் சுடலையை காவல் கொள் சித்தரோ? ருத்ரராய் எழுந்த கால் உயர்ந்து சீரிய ; தாண்டவம் தந்த நடராஜரோ? அப்பராய் அம்மையை தன் உடல் தந்து  தான் கொண்ட தாயுமானவரோ? தோழராய் கிழவராய் நல் வேடங் கொண்டு தொண்டரை யாட்கொண்ட ஈசரோ?   யாரவர்? யாரவர்? யாரவர்? தான் யிவர்  பேரெதும் கொண்ட பித்தரோ? பாருளர் யாவரும் பாதம் பணிந்திடும்  யெம் நல்லருள் நமசிவாயரே! நமசிவாயரே!

வேறென்ன வேண்டும் வேங்கடனே

வேறென்ன வேண்டும் வேங்கடனே வேடிக்கையில்லை வேங்கடனே, வேண்டும் கரங்களில் வேங்கடனே;  விரைந்து தருவாய் வேங்கடனே, உன்முகம் காணும் நாளது வேண்டும்; உடனே அதுவும் நீ தர வேண்டும், உண்மை உணரும் உளமது  வேண்டும்;  உதட்டில் உனது நாமம் வேண்டும், திருமண் மறைக்கும் முகமது வேண்டும்; தீங்கில்லாத தோள்களும் வேண்டும், சங்கு சக்ர கோலம் காட்டும்;  கண்ணன் கண்களை காணவும் வேண்டும், மயக்கும் மாலையில் மாயவன் வேண்டும்; மண்ணைத் தின்ற வாயதும் வேண்டும்,  இருளின் அழகு வண்ணம் வேண்டும், பொன்னாய் மின்னும் உருவமும் வேண்டும், கரங்களின் குறும்பை காண வேண்டும்;  காளிங்க நடனமும் காட்சியில் வேண்டும், கண்களில் ஆனந்தக் கண்ணீர் வேண்டும்;  கண்ணனின் கால்களை கழுவவும் வேண்டும், வேண்டும் வேண்டும் வேறென்ன வேண்டும்; வேங்கடன் கோலம் கண்முன் வேண்டும்.

குரு ராகவேந்திர

 ராகம்:மலஹரி  தாளம்: ரூபகம்      பல்லவி: ஸரிம,,,கரி/ஸரி கரிஸ,,,    அனு பல்லவி ரிம பதமப/ தப மகரிஸ குருவாய்,,,நின்று,அருள் தருவோனே, மேகம் தந்த மழையால், மண்ணில் விளைந்த கதிரே            சரணம் மப தஸஸரி/ரிஸ தபமப ரிம பதமப/தப மகரிஸ வாழ்வது தந்த மண்ணை  வாழ வைத்த மழையாய், நீயும் பிறந்து எம்மை, நிம்மதி தந்து காத்தாய் ஆதவன் தந்த ஒளியில், மலர்ந்த தாமரை மலராய் மத்வர் சொன்ன வழியில், மனிதர் வாழ்ந்திட செய்தாய் குருஉன் விழியே சாட்சி, நிலவின் அற்புதக் காட்சி கண்டது வாழ்வின் ஆட்சி, குருவின் முகமே மாட்சி

அருள்வாய் வாணி கலைவாணி

 ராகம் :மோகனம்  தாளம்: ரூபகம் கக ப,ப,/தப ஸ,ஸ,//) வருவாய் நீ,,யே,,அருள்வாய்  தா,,யே,, (ரிஸ ததப,/தப ககரி//) உனை நான் காண,அருள்வாய் வாணி, கப தஸதப/தப ககரி) கல்லும் பேச வைத்த, கருணை நீயே தாயே  (கக தபகரி/பக ககரிஸ) காளி தாசன் நாவில், கவிதை தந்த வாணி  (கக ககரிக/பக ப,ப,) பாடல் பாடிஉன்னை ,பார்த்து நின்றேன் தாயே (கக தபத,/தப ஸ,ஸ,) பாடும் பொருளே நீயே, பாடல் தந்த வாணி  (தக ரிரிஸஸ/தஸ த,தப) மீட்டும் வீணை கானம், காற்றில் பிறந்த ஞானம் (கப தஸதப/தப ககரிஸ) இதயம் இறங்கி இனிக்கும், என்றும் உந்தன் கானம் (ஸரி க,க,/கரி பகரி,) அருள் தா,நீ, வாநீ கலைவாணி (ஸரி ஸகரிஸ)  வா நீ தா நீ வாணி