முழுமதி சூடிய அழகர்

திங்களார் முழுமதி கரைந்த பிறை தனை

தன்முடி சூடிய அழகரோ?


மங்கையார் யெனும் பனி கங்கையை 

தன் தலைதனில் மறைத்த கள்வரோ?


அரவலார் வாசுகி உமிழ் நச்சதில் வீழ்ந்த 

தேவ வசுரரை காத்த நீலகண்டரோ?


சடையராய் சிவந்த தீயதில் எரியும் சுடலையை காவல் கொள் சித்தரோ?


ருத்ரராய் எழுந்த கால் உயர்ந்து சீரிய ;

தாண்டவம் தந்த நடராஜரோ?


அப்பராய் அம்மையை தன் உடல் தந்து 

தான் கொண்ட தாயுமானவரோ?


தோழராய் கிழவராய் நல் வேடங் கொண்டு தொண்டரை யாட்கொண்ட ஈசரோ?

 

யாரவர்? யாரவர்? யாரவர்? தான் யிவர் 

பேரெதும் கொண்ட பித்தரோ?


பாருளர் யாவரும் பாதம் பணிந்திடும் 

யெம் நல்லருள் நமசிவாயரே! நமசிவாயரே!

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்