எங்கள் கணபதி

சிந்தை முழுவதும் எந்தன் கணபதி,

செந்தூர் வேலன் தமையன் கணபதி,

தாயின் செல்லப் பிள்ளை கணபதி,

தருவான் எதையும் தந்த கணபதி,


எதிலும் என்றும் முதல்வன் கணபதி,

எல்லாம் தருவான் செல்வ கணபதி,

அன்னை லட்சுமியின் அன்பு கணபதி,

அள்ளித் தருபவன் லட்சுமி கணபதி,


வெற்றித் திருமகன் வீர கணபதி,

வேலவன் அண்ணன் பாச கணபதி,

வேண்டும் வேண்டும் எங்கும் கணபதி,

வேண்டி நின்றோம் உன்னை கணபதி

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

வாணி வந்தாக வேண்டும்