வாணி வந்தாக வேண்டும்

நீயும் வந்தாக வேண்டும் நின்று எமைக் காக்க வேண்டும் 

வானின் மழையாகி வானவில் காட்டி   

வாணி வந்தாக வேண்டும்,                           

கவிதை தந்தாக வேண்டும் கலைகள் கொண்டாட வேண்டும்    

கண்கள் காண்கின்ற காட்சி வழிநின்று கனவை மொழியாக.     

நாங்கள் தந்தாக வேண்டும்,   வாணி வந்தாக வேண்டும்,  

ஆடும் காலாக வேண்டும் அரங்கம் உனதாக வேண்டும் 

மனது கொண்டாடும் மகிழ்வை கொண்டாட மண்ணில் நின்றாட.                                 

ஆடும் காலாக வேண்டும், வாணி நீயாக வேண்டும், 

வானை வென்றாக வேண்டும் வழியாய் நீயாக வேண்டும் 

விண்ணை மண்ணோடு விரைந்து இணைத்திங்கு வாழும் வழிகாண 

வாணி வழியாக வேண்டும்,           

வாணி வந்தாக வேண்டும் 

வளங்கள் தந்தாக வேண்டும் 

வாணி வென்றாள வேண்டும்

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி