கண்கள் காண வரம் வேண்டும்
வேண்டுமய்யா வரம் வேண்டும்
உன்னைக் காண வர வேண்டும்
மனதில் மகிழ்வுடன் வர வேண்டும்
மந்திராலயம் வர வரம் வேண்டும்
காலங்கள் கடந்தும் ஆள்பவனே
காவிரி கரையின் மூலவனே
துன்ப துயரங்கள் துடைப்பவனே
துங்க பத்ராவில் வாழ்பவனே
வேண்டுமய்யா வரம் வேண்டும்
உன்னை காண வர வேண்டும்
வீணை கொண்ட வாணியவள்
விரும்பி அழைத்த சூரியனே
காண வேண்டும் உன் விழியை
கருணை செய்வாய் காவலனே
வேண்டுமய்யா வரம் வேண்டும்
உன்னை காண வர வேண்டும்
கண்களில் கனவுகள் வரவேண்டும்
கருணை மழையே வரம் வேண்டும்
கால்களில் வலுவை தர வேண்டும்
காண உன்னிடம் வர வேண்டும்
வேண்டுமய்யா வரம் வேண்டும் உன்னை காண வர வேண்டும்
Comments
Post a Comment