குரு ராகவேந்திர

 ராகம்:மலஹரி  தாளம்: ரூபகம்

     பல்லவி:

ஸரிம,,,கரி/ஸரி கரிஸ,,,

   அனு பல்லவி

ரிம பதமப/ தப மகரிஸ


குருவாய்,,,நின்று,அருள் தருவோனே,

மேகம் தந்த மழையால், மண்ணில் விளைந்த கதிரே


           சரணம்

மப தஸஸரி/ரிஸ தபமப

ரிம பதமப/தப மகரிஸ


வாழ்வது தந்த மண்ணை 

வாழ வைத்த மழையாய்,

நீயும் பிறந்து எம்மை,

நிம்மதி தந்து காத்தாய்


ஆதவன் தந்த ஒளியில்,

மலர்ந்த தாமரை மலராய்

மத்வர் சொன்ன வழியில்,

மனிதர் வாழ்ந்திட செய்தாய்


குருஉன் விழியே சாட்சி,

நிலவின் அற்புதக் காட்சி

கண்டது வாழ்வின் ஆட்சி,

குருவின் முகமே மாட்சி

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்