வேறென்ன வேண்டும் வேங்கடனே
வேறென்ன வேண்டும் வேங்கடனே வேடிக்கையில்லை வேங்கடனே,
வேண்டும் கரங்களில் வேங்கடனே;
விரைந்து தருவாய் வேங்கடனே,
உன்முகம் காணும் நாளது வேண்டும்;
உடனே அதுவும் நீ தர வேண்டும்,
உண்மை உணரும் உளமது வேண்டும்;
உதட்டில் உனது நாமம் வேண்டும்,
திருமண் மறைக்கும் முகமது வேண்டும்;
தீங்கில்லாத தோள்களும் வேண்டும்,
சங்கு சக்ர கோலம் காட்டும்;
கண்ணன் கண்களை காணவும் வேண்டும்,
மயக்கும் மாலையில் மாயவன் வேண்டும்; மண்ணைத் தின்ற வாயதும் வேண்டும்,
இருளின் அழகு வண்ணம் வேண்டும்,
பொன்னாய் மின்னும் உருவமும் வேண்டும்,
கரங்களின் குறும்பை காண வேண்டும்;
காளிங்க நடனமும் காட்சியில் வேண்டும்,
கண்களில் ஆனந்தக் கண்ணீர் வேண்டும்;
கண்ணனின் கால்களை கழுவவும் வேண்டும்,
வேண்டும் வேண்டும் வேறென்ன வேண்டும்;
வேங்கடன் கோலம் கண்முன் வேண்டும்.
Comments
Post a Comment