நாராயணா என்னும் நாமம்

மண்ணையளக்க வந்திறங்கி,

விண்ணையளந்த மன்னவன் நீ,


கண்ணின் கருமை நிறமாகி,

கனவில் வந்து நிலைத்தவன் நீ,


பொன்னின் நிறமதில் உளம்கொண்டு,

பொன்னாய் ஒளிரும் மேனியன் நீ,


சங்கு சக்கர கரம் காட்டி,

காக்கும் கருனை உள்ளம் நீ,


ஆசையோடு அனைத்து நின்று,

அருமை அழகை கொண்டவன் நீ,


கண்ணை மறைக்கும் திருநாமம்,

கனிந்து அருளும் உன் நாமம்,


எங்கள்  நா தரும் ஒரு நாமம்,

என்றும் உனது திருநாமம்,

நாங்கள் பாடும் உன் நாமம்,

நாராயணா யெனும் அருள் நாமம்

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்