ஈசனின் அற்புதம்

கிடைத்தது காட்சி நிறைந்தது நெஞ்சம் கையிலை நாயகனே,

கிடைத்தது தத்துவம் இனித்தது வாழ்வு ஈசன் உன் அருளே,


நெற்றியில் சூரியன் தலைமேல் வளர்பிறை புரிந்தது தத்துவமே,

வெம்மையும் குளுமையும் வேண்டும் என்றும் புவியின் வாழ்வதிலே,


அரியும் நாகமும் இடபமும் மயிலும் மூசிகம் காட்டிடும் ஈசனின் காட்சியிலே,

பல்லுயிர் எல்லாம் பாரினில் வேண்டும்  என்றொரு பாடம் தந்ததுவே,


அம்மை யப்பனும் அருமை செல்வமும் அன்பை சொல்லிடுமே,

மலையின் தோற்றமும் கங்கை ஓட்டமும் பூமியை காத்திடுமே,


ஈசனின் காட்சியும் இசைந்த கோலமும் வாழ்வின் தத்துவமே 

எல்லாம் நிறைந்து வாழும் வாழ்வு 

ஈசனின் அற்புதமே

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்