வலிமையின் வடிவே நரசிம்மா
வளமும் வலிமையும் வாய்த்திட வேண்டி; வந்து நின்றேன் உன் கண்முன்னே!
வலிமையின் வடிவே வாய்மையின் மொழியே;
வந்தருள் வாயே ஸ்ரீ நரசிம்மா!
கொண்டவள் மடியில் கொஞ்சிய மொழியில்; கோபம் தணிந்த குணவடிவே!
அஞ்சிடும் கோலத்தில் அரக்கனை அழித்து;
அன்புடன் அணைத்த அருட்கரமே!
எங்கெங்கு காணினும் இறைவன் இருப்பான்; என்பதை விதைத்த விளைநிலமே!
எல்லாம் நீயே வல்லான் நீயே; அருள்வாய் தருவாய் தாயுடனே!
Comments
Post a Comment