குரு ராகவேந்திர

உருவம் உருவம் பல உருவம் ஐந்து முகங்காட்டும்  

ஹரிவடிவம்,

ஆயுதங்கள் பலகாட்டும் அற்புத கலசம் உடன்காட்டும் ஆஞ்சநேயன் தன் வடிவம்,


அச்சம் தீமை விரட்டிடுமே அன்பாய் கருணை பொழிந்திடுமே 

அஞ்சனை மைந்தன் அருள் வடிவம்,


மனித வடிவில் பிறந்ததுவே

மந்திராலயத்தில் நிலைத்ததுவே,

காவியுடைதனை கொண்டதுவே 

கருணை மழையாய் பெய்ததுவே,

குறைகள் இல்லா  வாழ்வதனை 

குறைவின்றி நாளும் தந்ததுவே,

குருவாய் உருவாய்  உயர்ந்ததுவே 

ராகவேந் திரனாய் தந்ததுவே

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்