வாராய் வரலட்சுமி
வாராய் நீ எங்கள் தாயே வரலஷ்மி,நீ வாராய் நீ எங்கள் தாயே வரலஷ்மி,
வானத்தில் மழைவந்து வாசலைத்தெளிக்க,
வாடைகாற்று தெளித்ததை துடைக்க,
எங்கள் கரங்கள் கோலத்தை விதைக்க,
பயிராய் உயிராய் வாராய் நீ வரலஷ்மி தாயே,
வீட்டை துடைத்து தோரணம் கட்டி,
மேடை யமைத்து மாவிலை கட்டி,
கலசம் கொண்டு கண்கள் வரைந்து,
தென்னங்காய் கொண்டு தலையென வாரி,
பூவைச்சூடி திலகம் தந்திட வாராய் நீ தாயே நீ
வரலஷ்மி தாயே,
மஞ்சள் முகத்தில் குங்குமம் வைத்து,
கழுத்தில் மங்கல நாணும் பூட்டி,
பட்டில் ஆடை பாதத்தில் சலங்கை,
கையில் வளையல் கங்கணம் கட்டி,
கண் இமைக்காமல் காவல் புரிந்திட,
வாராய் நீ வரலஷ்மி தாயே,
அன்னை அழகாய் பாதம் பதித்திட,
ஆயிரம் வண்ணங்கள் கண்கள் பறித்திட,
இனிய கீதங்கள் எங்கும் முழங்கிட,
மங்கல ஓசையில் இல்லம் நிறைந்திட,
உள்ளம் குளிர்ந்திட வந்தாய் தாயே வரலஷ்மி,
தந்தாய் ஆயிரம் வரலஷ்மி
Comments
Post a Comment