எங்கள் ஈசன் கண்டது

எரியும் தீபம் இசைந்த மாலை 

எங்கள் ஈசன் கண்டது,

உடலின் சாம்பலும் ஒலிக்கும் உடுக்கையும் ஈசன் எமக்கு தந்தது,


அரிய வடிவம் அருவமாகி அம்மை

யவளுடன் நின்றது 

ஆடும் கால்களும் விரிந்த சடையும் 

வாழ்வின் அருமை சொன்னது,


சூலம் கொண்ட கரங்கள் எமக்கு 

அபயம் காட்டி சொன்னது 

துயரமில்லை துன்பமில்லை 

தூயவாழ்வை தந்தது,


நமசிவாய நமசிவாய நாமம் எங்கும் சென்றது

நமசிவாயன் நமக்கு தந்த 

நாளும் வென்று நின்றது

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்