அன்னை மாரியம்மன்
மாரி மகமாயி மலர் மாலைகள் கொண்டவளே,
மழையாய் நீ வந்திறங்கு எம் வாழ்வை காப்பவளே,
மாரி கருமாரி அருள் மாரி தாயவளே,
மாரி மழைமாரி தந்தருள் தாயவளே,
காயும் நிலங்காயும் கனலானது மண்மகளே,
நோகும் உளம்நோகும் நொந்திடும் உம் குலமே,
தாகம் எம்தாகம் தீர்த்திடு தாயவளே,
தாயே தீர்ப்பாயே தணித்திடு தாகமதை,
மாலை பூமாலை சூடிடும் மாரியம்மா,
மேகம் கருமேகம் காட்டிடு காளியம்மா,
வேண்டும் மழைவேண்டும் தந்திடு மாரியம்மா
வேண்டும் கரம் வேண்டும் காத்திடு காளியம்மா
Comments
Post a Comment