அஞ்சனை மைந்தன்
தீயை உண்டு தீயை வென்று தீக்கிரை தந்த தீரன் யார்?
தீயவன் சிறையில் தாயவள் கண்டு துயரம் நீக்கிய தூயவன் யார்?
அண்ணல் ராமன் நாமம் பாடும்
அனுமனைத் தவிர வேறிங்கு யார்!
அஞ்சனை மைந்தனை அண்ணலின் துணைவனை
அன்புடன் வணங்கி வாழ்ந்து பார்!
அச்சங்கள் மறைந்து ஆற்றல் எழுந்து
உச்சங்கள் தொடுவாய் உண்மை பார்!
ஏந்திடும் கதையுடன் ஏற்றிடும் கரத்துடன்
காட்டிடும் கனிந்த முகமதைப் பார்!
கவலை மறந்து காலம் கடந்து
வாழ்ந்திட வைக்கும் அனுமன் பார்!
Comments
Post a Comment