அன்னை லலிதாம்பிகை
ஆடியில் சரணம் அன்னையுன் மடியில் அருள்வாய் நீயே லலிதாம் பிகையே,
நாளும் பாடும் நாவும் உன்னையே அருள்வாய் தாயே லலிதாம்பிகையே,
காசிபன் தந்தவன் சூரியன் சாரதி,
அருணனை காத்தவள் லலிதாம்பிகையே,
கொண்டவள் கோபம் தீர்த்தான் ஈசன் சாந்தமானவள் தாயே நீயே லலிதாம்பிகையே,
நாவில் வசீனி கன்னிகை யானவள்
சகஸ்ரநாமம் தந்தாய் தாயே நீயே லலிதாம்பிகையே,
கண்களில் சாந்தம் கைதனில் அபயம் அமர்ந்த கோலமதை தந்தாய் நீயே லலிதாம்பிகையே,
கருவறை கொண்டவள் காக்கும் தாயவள் திருமியச்சூர் தாய் லலிதாம்பிகையே
Comments
Post a Comment