விட்டலா விட்டலா

காதல் அன்பால் கருவானது போல்

கல்லும் உளியால் சிலையானது,


மண்ணும் மழையால் பயிரானது போல்

கண்ணன் கண்ணால் அருளானது,


நிலவின் களங்கம் நிலையானது போல்

வாழ்வில் துயரம் கரையானது,


துளசி துடைக்கும் மருந்தானது

தூயவன் கண்ணன் மனதானது,


விடியும் சூரியன் வழியானது

விட்டலன் வாழ்வின் வழியானது

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்