அன்னை வாங்கலம்மா
வெள்ளை குதிரையின் மேலே ஏறி
வீரத்தாய் அவள் வருகின்றாள்,
மேகக்கூட்டம் போலே பறந்து
மேலே இருந்து பார்க்கின்றாள்,
வருகின்றாள் தாய் வருகின்றாள் வாங்கலம்மா வருகின்றாள்,
வருகின்றாள் தாய் வருகின்றாள்
வாங்கலை காக்க வருகின்றாள்,
இருண்ட முகம் தனில் சிவந்த விழிகொண்டு வருகின்றாள்,
இடியின் ஓசையாய் திரளும் மேகமாய் எம்மை காக்க வருகின்றாள்,
கால்களை உயர்த்தி பாயும் குதிரையில் பறந்து அவளும் வருகின்றாள்,
ஒளிரும் மின்னலில் இறங்கும் மழையாய் எம்நிலம் காக்க வருகின்றாள்,
வேலை ஏந்தி வெற்றியை பறிக்க வீரத்தாய் அவள் வருகின்றாள்,
புயலாய் மழையாய் பூமியை நனைக்க புறப்பட்டு அவளும் வருகின்றாள்,
எங்கள் தாய் அவள் வருகின்றாள்,
எல்லா வளமும் தருகின்றாள்,
வாங்கலம்மா வருகின்றாள்
வளமும் நலமும் தருகின்றாள்.
Comments
Post a Comment