சொக்கேசன்

வைகை நதியில் நீந்தி விளையாடி, 

பிட்டைத் தின்று கரையை மறந்து ,

காவலன் கையால் பிரம்படி பட்டு, 

சோதனை செய்தவன் சொக்கேசன்,

சாகசம் செய்த சொக்கேசன்


எரிந்த சாம்பல் உடல் கொள்வான்,

எலும்பு மாலையும் அவன் கொள்வான்,

மாலையும் மலர்களும் சூடிடுவான்,

மந்திரப் புன்னகை புரிந்திடுவான்,

வாழும் தத்துவம் சொக்கேசன்,

வாழ வைப்பவன் சொக்கேசன்,


நாளும் கிழமையும் சொக்கேசன்,

நம்மைக் காப்பவன் சொக்கேசன்,

நமசிவாயன் அவன் சொக்கேசன்,

நன்மைகள் செய்பவன் சொக்கேசன்

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்