ஈசன் நீயே உண்மையப்பா

அறியும் மனதில் சுடராய் ஒளியாய் 

எறியும் தீபம் நீயப்பா


அறியா மனதிலும் இருளை நீக்கும் 

ஈசன் உந்தன் கருணை யப்பா


எதிலும் விளங்கும் உண்மையைப்பா


உலகொன்று படைத்தாய் உயிர்களில் நிலைத்தாய்

உனையன்றி வேறெதும் இல்லையப்பா


அன்னை தந்தையாய் ஆகி நின்றதும்

அனைத்து உயிரிலும் தன்னை கொண்டதும்

ஈசன் நீ  தந்த ஞானமப்பா

நிலைக்கும் உலகின் வேதமப்பா


ஈசன் நீயே ஞானமப்பா

நிலைக்கும் உலகின் வேதமப்பா

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்