அன்னை சந்தோஷ் மாதா
வெள்ளி நிலவு கோலம் காட்டும்
வேலும் வாளும் பகையை ஓட்டும்,
கண்கள் பொழியும் கருனை மழையும்
கழுத்தின் மாலையும் கவலை போக்கும்,
கையில் கிண்ணம் கரத்தின் அபயம்
கண்ணின் இமையாய் நம்மை காக்கும்,
சாந்தம் அமைதி தந்து அருளும்
சந்தோஷி மாதா சங்கடம் தீர்க்கும்
Comments
Post a Comment