அன்னை மகாசோடசியே
அன்னை தாயே அற்புத வடிவே
காக்கும் துர்க்கையம்மா,
மங்களம் தருவாய் மகாசோடசி
மங்கள நாளினிலே,
கண்ணியம் காப்பாய்
கயமையை களைவாய்
கையில்வேலுடனே,
கரங்கள் ஆயிரம் காட்டி நின்றாய்
எங்கள் கானக குறமகளே,
இல்லம் வருவாய்
உள்ளம் கொள்வாய்
வீரத்தின்திருமகளே,
விதியினை வெல்லும்
மதிதனை அருள்வாய் மகாசோடசியே,
தாயே மகாசோடசியே
Comments
Post a Comment