குரு ராகவேந்திர

ராம நாமமும் கிருஷ்ண கீதையும் தாங்கி தந்த குருவே 

அரியின் வடிவிலே ஆள வந்தவன் ஆக்கி தந்த வழியே


ஆள வந்தாய் குருவே நீ 

ஆக்கி தந்தாய் வழியே


வாழும் வழியதில் வாசலாகி நீ வாழ்வை தந்த குருவே


வாட்டம் போக்கவே வாழ்வை காக்கவே  

மூல ராமன் கண்ட குருவே 


கண்ணன் சொன்னதை காலம் வென்று நீ கரைத்து தந்த குருவே


காணும் விழிகளில் காட்டு வழியதில் 

காத்து நின்ற குருவே


அன்பின் நேசத்தை அரியின் வேசத்தில் காத்து நின்ற உருவே


காவலாகி என்றும் காக்கும் என்பதை 

காட்டி தந்த குருவே


ராஜனாக நிற்கும் குருவே எங்கள் ராகவேந்திர குருவே

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்