குரு ராகவேந்திர

பாடம் சொன்னவன் பார்த்து மகிழ அற்புதம் செய்தது யாரம்மா,

பார்த்தசாரதியை தோளில் தாங்கும் ராகவேந்திர குருவம்மா 

நம்மை காக்கும் குருவம்மா,


முற்றும் துறந்த முனிவனின் முகத்தில் மந்திரப் புன்னகை ஏனம்மா,

காரிருள்வண்ணன் கண்ணன் செய்யும் கள்ளம் அதுவே பாரம்மா,


கையில் ஏட்டுடன் கனிந்த முகமது சொல்லும் பாடம் கூறம்மா,

கீதை தந்தவன் சொன்னதை தவிர வேறுயிங்கு என்னம்மா,


ராகம் சொல்லி பாடம்  பாடம் சொல்லும்  ராகவேந்திரர் பாரம்மா, ராதையின் காதலன் ரட்சிப்பான் நம்மை ராகவேந்திரரைப் பாடம்மா,


 நீ ராகவேந்திரரைப் பாடம்மா

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்