அன்னை நீலயதாட்சி
அழகு வடிவம் அன்னை உருவம்
அணைத்து காக்குமடா
அன்பில் கரைந்து அருளை பொழியும்
காவல் தெய்வமடா,
சிவனில் இணைந்து சிந்தை கலந்து நிலைத்த வடிவமடா
நினைக்கும் முன்னே நித்தம் அருளும் நீலயதாக்ஷியடா,
கடலின் ஓரம் காற்றில் அலையில் வாழும் தெய்வமடா
நன்மை கோடி நாளும் அருள்வாள்
நாகை மண்ணிலடா,
பொன்னும் நகையும் மலரும் சூடி
நிலவு கோலமடா
நீலகண்டனின் நினைவில் வாழ்ந்திடும் நீலதயாக்ஷியடா
Comments
Post a Comment