வேலவன் குமரன்
வேலோடும் மயிலோடும் விளையாடும் திருக்கோலம் உனையன்றி யார் சொல்லடா ? முருகா உனையன்றி யார் சொல்லடா?
கவி பாடும் உன்னழகை காணாது உளம் வாடும்
கண்திறந்து பார்ப்பாயடா;
குமரா காணும் வழி சொல்வாயடா !
மனங் கவரும் மலர் மாலை
மயில் காட்டும் தன் தோகை
மனதார கண்டோமடா முருகா
மகிழ்தோடி வந்தோமடா!
எமையாளும் இளங்குமரன்
எழிலான அருள் கோலம்
குறைவின்றி கண்டோமடா
முருகா!
நிறைவோடு நின்றோமடா!
Comments
Post a Comment