அன்னை உள்ளமே
அன்னை உள்ளமே அன்பின் வெள்ளமே
கண்கள் காட்டிடும்
காவல் தெய்வமே,
கரங்கள் தேடிடும்
உந்தன் பாதமே,
வெள்ளை மலரே
விளக்கின் மஞ்சளே
விடியும் சூரியன்
தந்த வெள்ளமே
விளைந்த நெல்லாய் வளைந்து வணங்குவோம்,
மண்ணில் முளைத்திட்ட மலையின் வடிவமே
மழையை தந்திட்ட
கருனை மேகமே
ஓடி வளர்ந்தே
உன் காலடி நனைப்போம்,
ஆயிரம் ஆயிரம்
கண்டோம் அன்னையே
ஆயினும் போதும்
அம்மா நீயே
Comments
Post a Comment