குரு ராகவேந்திர
கண்ணன் இங்கு வந்ததென்ன
காமதேனு கொண்டதென்ன
எங்கள் குரு பெற்றதென்ன
எல்லாம் எமக்கு தந்ததென்ன
மண்ணில் வந்து பிறந்த மன்னன்
மாஞ்சாலம் கொண்ட கண்ணன்
மண்ணை தின்ற கண்ணனைப் போல் மண்ணை தந்து காத்ததென்ன
எத்தனையோ நிலம் கடந்து
எங்கள் துயர் தான் அறிந்து
எல்லோர்க்கும் காவலனாய்
என்றும் எமை காத்த தென்ன
நீல வண்ண கண்ணன் அவன்
நீதி சொன்ன காவல் மகன்
நெஞ்சமதில் நிறைந்து நின்றே
நிலைத்தெம்மை காத்ததென்ன
Comments
Post a Comment