லஷ்மி நாராயணன்
தாமரை மலரில் வீற்றிருப்பான்
தங்கமாய் எம்மை காத்திருப்பான்
தாயவள் தன்னுடன் நாராயணன்
எங்கள் லஷ்மி நாராயணன்
ஆழ்கடல் தன்னில் அலையுடனே
ஆதிசேஷன் அவன் நிழல் தனிலே
குளிர்தரும் நிலவாய் நாராயணன்
எங்கள் லஷ்மி நாராயணன்
தேடிடும் செல்வம் தந்திடுவான்
தென்மலை வேங்கட கிரி யாள்வான்
கூடிடும் அருளால் காத்திடுவான்
நாராயணன் லஷ்மி நாராயணன்
பாடியெம் மொழியால் அழைத்திடுவோம்
பார்த்த சாரதி புகழ் பாடிடுவோம்
கூடியெம் குலத்துடன் வணங்கிடுவோம்
கோபாலன் துணையென வாழ்ந்திடுவோம்
Comments
Post a Comment