குருவே அருளே
உண்மை ஒன்று சொல்வேன் ;
உன்னை வணங்கி சொல்வேன்;
கண்களில் வழியும்
கருணை எங்கள்
கங்கை என்றே சொல்வேன்!
கண்கள் காட்டும் ஒளியில்; காரிருள் எண்ணம் மறையும் ;
கலங்கம் இன்றி உள்ளம் எங்கள்
குருவின் பாதம் பணியும்!
மன்னன் காட்டிய வழியில்;
மனிதர் கால்கள் விரையும்;
மாமுனி உந்தன் முன்னே
முழு நிலவும் கூசி மறையும்!
குளிர் தரும் ஒளியே; விழியே;
குருவே எங்கள் வழியே!
தருவாய் நிழலாய் புவிக்கு;
தந்திடு நிம்மதி எமக்கு!
Comments
Post a Comment