அன்னை வராகி

கருமேக ஆடையோடு கண் திறந்து மின்னலாகி 

இடியாக இறங்கி வந்தாள் அன்னை வராகி,

புயல் மழையாகி மண்ணைக் காத்தாள் அன்னை வராகி,


வந்தாள் வராகி 

நிலம் கொண்டாள் வராகி,

தந்தாள் வராகி 

உயிர் வென்றாள் வராகி,


புதையுண்ட பூமி தன்னை புதையாமல் காத்தளித்த 

பெருமாளின் அவதாரம் அன்னை வராகி,

எட்டு அவதார கன்னியவள் அன்னை வராகி,


நின்றாள் வராகி 

எட்டு கையுடன் வராகி,

கையில் வராகி 

கலப்பை கொண்டாள் வராகி,


உருவத்தில் வராகம் உள்ளத்தின் புதுராகம் குலங்காக்கும் கன்னியவள் எங்கள் வராகி,

குடும்பத்தை காத்துநிற்பாள் அன்னை வராகி, 


அன்னை வராகி நம்மை ஆளும் வராகி, கண்ணில் உயிராகி நம்மை காக்கும் வராகி

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்