வேலவன் அவனே

வேலுடன் மயிலுடன் யார் வருவார் ?

வேலன் அவனின்றி இங்கு யார் தருவார்!


கூடும் முகில் போல் யார் வருவார்?

கொட்டும் மழை தன்னை 

இங்கு யார் தருவார்!


மனதில் குறையெதும் எமக்கு இல்லை;

மறையவன் மைந்தனால் குறைவுமில்லை!


ஓடும் நதியின்றி உயிர்கள் இல்லை;

ஓம் என்னும் சொல்லின்றி உயர்வு மில்லை!


கண்கள் காண்பது கனவுமில்லை;

காப்பான் வேலன் என்றும்

பொய்யுமில்லை!

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்