ஆசைகண்ணா ஆடி வா
ஆடி வா நீ ஆசை கண்ணா ஆடி வா கண்ணா,
பாடி உந்தன் பாதம் தொடுவேன்
நீ ஆடிவா கண்ணா,
ஆயர்பாடி ஆடி மகிழ்ந்திட்ட ஆசை கண்ணா நீ
அல்லும் பகலும்பாடி நின்றோம்
ஆசை கண்ணா வா
மயிலின் இறகால் சிகரம் கொண்டாய்
ஆசை கண்ணா நீ
அழகில் மயங்கி அடிமை யானோம்
ஆசை கண்ணா வா,
குழலினை கொண்டாய் கூட்டத்தை கவர்ந்தாய்
கொஞ்சும் பாடல் நீ
பாடல் கேட்க ஓடி வந்தோம்
ஆசை கண்ணா வா,
ஆசை கண்ணா வா,எங்கள் ஆசை கண்ணா வா
Comments
Post a Comment