மாமன் கோவிந்தன்

மேகக்கூட்டம் தலையைத் தொட்டு தவழ்ந்து விளையாட,

பச்சை மரங்கள் வளர்ந்து உயர்ந்து அதனைத் தாலாட்ட,

மலையின்மடியில் மன்னன் முகமது மலர்ந்து மகிழ்ந்தாட,

மலையப்ப சாமியுன் தோற்றம் எம்மை மழையாய்  குளிரூட்டும்,


குன்றின் மேலே குமரன் மாமன் கோலம் கொண்டாட, 

குறைலில்லாத கோவிந்தன் புகழை கூவி குரல் பாட,

மங்கா ஒளியுடன் மாயவன் கோவிந்தன் ஆதவன் சுடராக,

கூடும் கூட்டம் நாளும் பொழுதும் காணும் நிறைவாக,

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்