எங்கள் காளியவள்

எரியும் தீயாய் எங்கும் ஒளியாய் உலவும் தேவியவள் ;

ஊரைக் கொல்லும் தீமையை எரிப்பாள் எங்கள் காளியவள்,

வேலும் சூலமும் வேம்பும் அனலும் கொண்டவள் தேவியவள் ;

வேடிக்கை காட்டும் வீணரை வீழ்த்தும் வெற்றிக் காளியவள்,

நீலநிறத்தில் ஆடை கொண்டாள் நீலி தேவியவள்;

சிங்க பல்கொண்டு சீறி எழுவாள் சினத்தில் காளியவள்,

எரித்த தீமையின் சாம்பலில் 
எழுவாள் ஈசனின் தேவியவள்;

தாகம் தணிந்தே தாயாய் கனிவாள் 
எங்கள் காளியவள்

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்