அன்னை காளி
அலைபாயும் மனதோடு அச்சத்தின் பிடியோடு
உனைத்தேடி வந்தோமம்மா,
தாயே வழியொன்று சொல்வாயம்மா,
நினைவெல்லாம் தடுமாற்றம்
தினந்தோறும் ஒருமாற்றம்
மனம்சோர்ந்து போனதம்மா தாயே மருந்தொன்று தருவாயம்மா,
விழிகாணும் உன்தீபம்
வழிகாட்டும் சுடர் தீபம்
இருள் நீக்கி தந்ததம்மா
சூலம் துணைவந்து காத்ததம்மா,
கொடுங்கோபம் முகம் காட்டும்
கொலைவாளும் கரம் காட்டும்
பகைகூட்டம் வீழ்ந்ததம்மா காளி
வரம் வந்து காத்தாயம்மா
Comments
Post a Comment