அன்னை லஷ்மி

என்ன காட்சியிது அள்ளும் அள்ளும்  

வண்ண கோலமிது அன்னை கோலமிது,

எட்டு கரங்களிது ஏந்தி ஏந்தி 

நம்மை காக்க கொண்ட நேசமிது,


பாயும் குதிரை பலம் யானை மீது வலம் 

பாரை காக்கும் நலம் என்ன காட்சியிது 

அன்னை தேவியின் இனிய தோற்றமிது 

எம்மை காக்குமிது என்றும் காவலிது


கனிவை காட்டும் முகம் அபயம் காட்டும் கரம் 

உலகை ஆளும் குணம் எங்கள் தாயவள்

உலகை காத்திட அள்ளித் தருபவள் 

உயிரின் நாயகி லஷ்மி தேவியே

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்