ஈசனின் கால்கள் ஆடியதே
கண்கள் இங்கே காண்கிறதே
காட்சியிங்கே வாழ்கிறதே
ஆலகால விடத்தை உண்டவன்
அற்புத நடனம் காண்கிறதே,
தேவரை காக்க விடத்தை உண்ட
நீலகண்டன் காட்சியிங்கே ,
காளைமிதிலே கால்கள் ஆட
காண்பவர் பாவம் போக்கியதே,
பத்து கரங்கள் ஆடியதே
பாவம் தீர்க்க ஆடியதே
இடபவாகனன் இரண்டு கொம்பிடை
ஈசனின் கால்கள் ஆடியதே,
பித்தன் சித்தன் காட்சி தந்தான்
சித்தம் தெளிந்திட மருந்து தந்தான்
சிவனே சிந்தையில் இறங்கி வந்து
நமசிவாய எனும் நன்மை தந்தான்,
ஓம் நமசிவாய,
ஓம் நமசிவாய
Comments
Post a Comment