அன்னை லஷ்மி

தாமரை மலரே தாங்கிய பாதங்கள்

தவழ்ந்திடும் புன்னகை மீதவள் வரங்கள்


ஏந்திய செல்வங்கள் இறைத்திட்ட கரங்கள்

எங்களின் வாழ்விற்கு விதைத்திட்ட உரங்கள்


அழகிய தாமரை ஏந்திய கரங்கள்

அன்னை லக்ஷ்மியின் அருள்தரும் விழிகள்


நிலவென முகமது தந்திடும் ஒளிகள்

நீக்கிடும் இருளதை நிலைத்திடும் வழிகள்


கருணையின் வடிவாய் கண்முன் குலமகள்

மாதவன் மணமகள் மறைந்தன கவலைகள்

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்