ஆற்றல் அனுமன் தானா
நீலவண்ணக் கடலையளக்கும்
நீலவண்ண ராமா,
நின் பாதம் பணிந்து நிற்கும் அன்பன்
எங்கள் அனுமன் தானா?
எங்கள் அருமை அனுமன் தானா,
அலைகடலைத் தாண்டியே அன்னையை காட்டிய
ஆற்றல் அனுமன் கொண்டான்,
அஞ்சனை மைந்தன் உன் ஆருயிராகி உவகை கொண்டு நின்றான்
ராமா உலகை வென்று நின்றான்,
தாயை கொள்ளவே நீ பாதை பார்க்கையில்
பாதம் பணிந்து நின்றான்
கார்வண்ணனே நீ கடலை வெல்ல அவன் சேர்ந்து சேது கொண்டான்,
செல்லபிள்ளையாகி நின்றான்,
ராமா நின்னைநெஞ்சில் கொண்டான்,
ராம ராம ராம ராம என்ற நாமம் தந்தான்,
ராமசீதா ராமசீதா என்றே வாழ்ந்து வந்தான்
Comments
Post a Comment