குரு ராகவேந்திர
கரம் காட்டி கருணை செய்யும் ராகவேந்திரா,
கண் திறந்து பாடி நின்றோம் ராகவேந்திரா,
மண்ணை நீ மருந்தாக்கி மாயமே செய்தாய்,
மாயவன் அவன் கண்ணனைப் போல்
மகிமை கொண்டாய்,
மாடுமேய்க்கும் பாலகனின் நாவில் நின்றாய்,
மன்னனிடம் மந்திரியாய் உயர்வு தந்தாய்,
எண்ணி எண்ணி எத்தனையோ வழிகள் சொன்னாய்,
ஏழை எங்கள் இருளகற்றி ஒளியைத் தந்தாய்,
Comments
Post a Comment