முக்தீஸ்வரன்
வானின் நிலவு குளிரினைக் கூட்டும்,
வண்ண வயல்கள் தலையை ஆட்டும்,
தென்னை வளைந்து வழியினைக் காட்டும்,
தேடும் கண்களில் உந்தன் நாட்டம்,
முன்னை வினைகள் அருளைக் கூட்டும்,
முக்தீஸ்வரன் உன்னைக் காட்டும்,
நாவுக்கரசனும் அவனின் பாட்டும்,
நமசிவாயனை என்றும் போற்றும்
Comments
Post a Comment