ராமதூதனே
பஞ்சமுகம் காட்டும் ராம தூதனே
பாசத்தோடு கை காட்டும் வீரனே,
அஞ்சாமல் யமனை வென்ற பாயும் சூரனே அருள்வாய் நீ அஞ்சனையின் அன்பு மைந்தனே,
கலைந்தோடி போனதெம் கனவின் மேகமே
கனலாகி நொந்ததெம் உயிரின் தேகமே
இசை பாடி உனைய ழைக்கும் வாழ்வின் ராகமே
இன்றெமெக்கு யாருமில்லை ராம தூதனே,
குருவாகி உலகாளும் ஞான அனுமனே
சிரம்தாழ்ந்து சரணடைந்தோம் எங்கள் ராஜனே,
எம் சிரம் தாழ்ந்து சரணடைந்தோம் குரு ராஜனே
Comments
Post a Comment