வேங்கடேசன்

வேண்டியதை தந்திடுவான் வேங்கடேசன்,

வேண்டும் மட்டும் தந்திடுவான் வேங்கடேசன்,


வெள்ளி மின்னும் வானில் அவன் வேங்கடேசன், 

வெண்ணிலவாய் வலம் வருவான் வேங்கடேசன்,


கருமேகவண்ணம் கொண்டான் வேங்கடேசன்,

காதல் மகள் நெஞ்சில் கொண்டான் வேங்கடேசன்,


அன்னையவள் ஆசையிலே வேங்கடேசன்,

ஆழ்ந்திருப்பான் வீழ்ந்திருப்பான் வேங்கடேசன்,


சங்கு சக்ர தாரியவன் வேங்கடேசன்,

சார்ந்தோரை காத்திடுவான் வேங்கடேசன்,


வென்றிடுவான் நம்மனதை வேங்கடேசன், 

வேண்டும் வரம் தந்திடுவான் வேங்கடேசன்

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்