கலையின் வாணி
காலை கதிரவன் காட்டிடும் அழகு ;
கலையின் ராணி வாணியின் அழகு!
வீணை கொண்டது விரல்களின் உறவு; வெள்ளை தாமரை மீதவள் கனவு!
உலகின் நாவில் உலவிடும் மொழியது
உணர்வின் வழியாய் உண்மையின் ஒலியது!
விழிகள் காணும் ஒளியின் நிறமது ;
நிலைத்திடும் நினைவில் அவள் தந்த வரமது!
விரல்களின் அசைவில் விளைந்திடும் பயிரது;
வீணையின் நாதத்தில் வளர்ந்திடும் கலையது!
செய்யும் தொழிலதில் வெற்றியின் வழியது;
சேர்ந்திடும் செல்வம் தேவியின் அருளது!
கலையின் வாணி காத்திடும் அழகது;
கவிதைகள் சொல்லா மொழியின் அழகது!
வான் கொண்ட அதிசயம் கண்களின் உறவது;
வாணியின் அருளே வாழ்வதன் கனவது!
Comments
Post a Comment