பரமேஸ்வரா எங்கள் சோமேஸ்வரா

விழியாலே வழியாகும் வெண்பளிங்கு ஒளியாகும்;

கயல் ஆடும் கடலாகும் கண்ணிமைகள் கரையாகும் ;

காணாத காட்சியிங்கு பரமேஸ்வரா'

கண் விழியாலே எமை யாளும் சோமேஸ்வரா,


பிறைநின்ற முகம் ஒன்று;குளிர் ஒளிகாட்டும் வழி நின்று ;

கனல் காட்டும் கண்ணொன்றுபரமேஸ்வரா ;

பகைவென்று எமை காக்கும் சோமேஸ்வரா,


செவ்வானம் சிவந்திங்கு; சிரம் தாங்கும் சிவன் கோலம்;

கலையாத ஓவியமாய் பரமேஸ்வரா; கண்கொண்டோம் 

காவல் நீயே சோமேஸ்வரா,

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்